Skip to main content

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஏற்றப்பட்ட லட்ச தீபம்!

Nov 29, 2020 236 views Posted By : YarlSri TV
Image

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஏற்றப்பட்ட லட்ச தீபம்! 

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு லட்சதீபம் ஏற்றப்பட்டது



மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தமிழ் மாதம் தோறும் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 24 ம் தேதி கார்த்திகை உற்சவ நிகழ்ச்சிக்கான கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. சுவாமி சன்னதி மண்டபத்தில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. கொடியேற்றத்தை தொடர்ந்து 5 நாட்கள் தினமும் காலை, மாலை வேளையில் பஞ்சமூர்த்திகள் கோவில் வளாகத்தில் உள்ள ஆடி வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.



5 நாட்கள் நடைபெற்ற இந்த உற்சவத்தில் இன்று திருக்கார்த்திகை தீப விழா நடைபெறும் நிலையில், மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக்குளம், மீனாட்சி அம்மன், சொக்கநாத சுவாமி சன்னதிகளில் லட்சத்தீபம் ஏற்றப்பட்டு மீனாட்சி அம்மன் கோவில் தீபங்களால் அழகுற காட்சியளிக்கிறது. தொடர்ந்து கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு அம்மன் சன்னதி மற்றும் சுவாமி சன்னதி வாயில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை