Skip to main content

இத்தாலியில் அதிகரித்து வரும் தொற்று காரணமாக கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 16 லட்சத்தைக் கடந்துள்ளது!

Dec 01, 2020 240 views Posted By : YarlSri TV
Image

இத்தாலியில் அதிகரித்து வரும் தொற்று காரணமாக கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 16 லட்சத்தைக் கடந்துள்ளது! 

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது.



உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெருமளவில் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 



தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியை தாண்டியது. அவர்களில் 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.



கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் இத்தாலி 8-வது இடத்தில் உள்ளது



இந்நிலையில், ஐரோப்பிய நாடான இத்தாலியில் ஒரே நாளில் 16,377 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 16 லட்சத்தைத் தாண்டியுள்ளது.



அந்நாட்டில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 672 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இத்தாலியில் வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆயிரத்து 576 ஆக அதிகரித்துள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை