Skip to main content

ஆஸ்துமாவை கட்டுப்படுத்த மாத்திரை மருந்துகள்!

Oct 08, 2020 258 views Posted By : YarlSri TV
Image

ஆஸ்துமாவை கட்டுப்படுத்த மாத்திரை மருந்துகள்! 

ஆஸ்துமாவை கட்டுப்படுத்த மாத்திரை மருந்துகள் எதுவும் தேவையில்லை. வீட்டில் இருக்கும் சமையல் அறை பொருட்களை கொண்டு எளிதில் செய்ய முடியும்.



அந்தவகையில் இதற்கு கருப்பு ஏலாக்காய் பெரிதும் உதவி புரிகின்றது.



கருப்பு ஏலக்காயில் ஆன்டி செப்டிக், ஆன்டிபாஸ்மோடிக், அழற்சி எதிர்ப்பு பொருள்கள் உள்ளன.



இதனால் இது ஒரு ஆக்ஸிஜனேற்ற காரணியாக , ஒரு ஹோமியோஸ்டிஸ் ஏஜென்ட் மாதிரி செயல்பட்டு இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.



மேலும் சுவாச பாதையில் நுரையீரல் வழியாக காற்று உள்ளே செல்லவும் வெளியே விடவும் எளிதாகிறது.



இருமல், தொண்டை புண், சளி போன்றவற்றை குணப்படுத்துகிறது. சுவாசப் பாதையில் உள்ள சளியை இளக்கி வெளியேற்ற உதவுகிறது.



இருப்பினும் ஆஸ்துமாவை முற்றிலுமாக குணப்படுத்த இது உதவாது. ஆனால் உங்கள் மோசமான சுவாசப் பாதையை குறைந்தளவு சரியாக்கி மூச்சு விட இது உதவுகிறது.



அதுமட்டுமின்றி இதில் கசாயம் செய்து குடித்து வர நல்ல பயனை காணலாம். தற்போது இந்த கசாயத்தை எப்படி செய்வது என்று பார்ப்போம்.



தேவையான பொருட்கள்



  • 2 கிராம்பு

  • 4-5 கருப்பு ஏலக்காய்

  • 1 டீ ஸ்பூன் இஞ்சி (துருவியது)

  • 5-6 துளிசி இலைகள்

  • 3-4 கப் தண்ணீர்



தயாரிக்கும் முறை


மேலே குறிப்பிட்டுள்ள மசாலா பொருட்களை ஒரு கடாயில் போட்டு வதக்குங்கள், இப்போது கடாயில் தண்ணீர் ஊற்றி இஞ்சி சேர்த்து கொதிக்க விடவும்.



பிறகு துளிசி இலைகளை போட்டு 4-5 நிமிடங்கள் மிதமான சூட்டில் வைக்கவும். பிறகு அடுப்பை அணைத்து விட்டு ஒரு கப்பில் தண்ணீரை மட்டும் வடிகட்டி கொள்ளவும். தண்ணீர் பாதியாக வற்றும் வரை காய்ச்ச வேண்டும்.



இது ஆஸ்துமாவின் தீவிரத்தை குறைக்க பயன்படுகிறது. முற்றிலும் குணப்படுத்தாவிட்டாலும் ஆஸ்துமாவின் பாதிப்பை பெருமளவு குறைக்க உதவுகிறது.



 


Categories: மருத்துவம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை