Skip to main content

அமைச்சர் உட்பட ஒரே நாளில் 10,606 பேருக்கு கொரோனா!

Oct 07, 2020 196 views Posted By : YarlSri TV
Image

அமைச்சர் உட்பட ஒரே நாளில் 10,606 பேருக்கு கொரோனா! 

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் அக்டோபர் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 67 லட்சத்து 57 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதுவரை 57 லட்சத்து 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 4 ஆயிரமாக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்ட மாநிலமான கேரளா, சிறப்பான தடுப்பு நடவடிக்கைகளால் பிற மாநிலங்களைவிட தொற்றிலிருந்து விரைவாக மீண்டு வந்தது. இந்நிலையில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வருவோரால் கேரளாவில் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.



இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரளாவில் இன்று அதிகபட்சமாக மேலும் 10,606 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 9,542 பேருக்கு நோய் பாதிப்புடைய தொடர்புகளால் பாதிக்கப்பட்டனர். இன்று 6,161 பேர் குணமடைந்த நிலையில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை 92,161 பேர் மருத்துவமனை சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,53,405 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இதுவரை 1,60,253 பேர் குணமடைந்தனர். மொத்த உயிரிழப்பு 906 பேர். நேற்று 60,494 பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில் இன்று 73,816 என்ற அதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதனிடையே கேரள மின் துறை அமைச்சர் மனியாஷானுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை