Skip to main content

தமிழர்களுடைய வரலாற்று உண்மையை கூறிய விக்னேஸ்வரனை கைது செய்வோம் என கூறுவது வேடிக்கையான விடயம் என்கின்றார் சி வி கே சிவஞானம்!

Sep 04, 2020 272 views Posted By : YarlSri TV
Image

தமிழர்களுடைய வரலாற்று உண்மையை கூறிய விக்னேஸ்வரனை கைது செய்வோம் என கூறுவது வேடிக்கையான விடயம் என்கின்றார் சி வி கே சிவஞானம்! 

கிழக்கு மரபுரிமை செயலணியின் உறுப்பினர் 



எல்லாவல மேத்தானந்த தேரர் 



தெரிவித்த கருத்து  தொடர்பில்மேற்கண்டவாறு தெரிவித்தார்



தமிழர்களுடைய பூர்வீகங்கள் இந்து ஆலயங்கள் பரவிக்கிடக்கின்றன இலங்கை பூராவம் உ லகம் பூராகவும் அதிலும் வடக்கு கிழக்கில் வரலாறுகள் கல்வெட்டுக்கள் பெருமளவில் காணப்படுகின்றன 



அதனைவிட 1987ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஜே ஆர் ஜெயவர்த்தன -ராஜீவ்காந்தி ஒப்பந்தத்திலே வடக்கு கிழக்கு பிரதேசங்கள் தமிழ் பேசும் மக்களுடைய வரலாற்று ரீதியான வாழ்விடம் என்று உறுதிப் படுத்தப்பட்டிருக்கிறது இரண்டு அரசாங்கத்தினால் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது 



இந்த எல்லாவல மேத்தானந்த தேரரை விட ஆயிரம் மடங்கு வரலாறு தெரிந்த ஜே ஆர் ஜெயவர்த்தன அதனை ஏற்றுக்கொண்டிருக்கிறார்.



வரலாற்று ரீதியாக ஆவண ரீதியாக இந்த மண்ணிலேயே தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்குஆதாரங்கள் உண்டு



அதனைவிட வேறு எந்தஆவணம் வேண்டும் இந்த எல்லானந்த தேரருக்கு இது ஏற்கனவே எப்போதுமே நான் பேசிக் கொண்டு இருக்கின்ற ஒரு விடயம் அதைத்தான் விக்னேஸ்வரனும் தனது கருத்தாக தெரிவித்திருக்கின்றார் அவர் புதிதாக எதையும் இறக்குமதி செய்துகூறவில்லை அவர் வரலாற்றைத்தான் தெரிவித்திருந்தார் 



ஆனால் தற்பொழுது நாங்கள் கெட்டிக்காரர்கள் ,சிங்களஏகாதிபத்தியம் ,சிங்கள மேலாதிக்கம் ஒரு மொழி, ஒரு இனம்  வாடகைவீட்டில் குடியிருப்போர் என்று பல்வேறுபட்ட கருத்துகளை தென்னிலங்கையில் தெரிவித்து வருகின்றார்கள் எனவே வரலாற்று ரீதியாக நாங்கள் தான் பூர்வீக குடிகள் அது பெரியவிடயமுமில்லை 



கடந்த 2000 ஆண்டுகளாக சிங்களவர்களும்  தமிழர்களும் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் நான் பெரிது நீ பெரிதென்று இல்லாமல்  நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் வரலாற்று ரீதியாக அவர்களும் வாழ்ந்திருக்கின்றார்கள் அதை வைத்துக்கொண்டு விக்னேஸ்வரனை கைது செய்ய வேண்டும் அவரது கடவுச்சீட்டைப் பறிக்கவேண்டும் என்று அச்சுறுத்தல்விடுதல் என்பது ஒரு வேடிக்கையான விஷயமாக காணப்படுகின்றது 



பெரிய விடயம் என்னவென்றால் கிழக்கு மரபுரிமை செயலணிக்கு அவர் ஒரு பெரியமுக்கிய உறுப்பினராகவுள்ளார்   இனி வரும் காலங்களில் எவ்வாறான சிபாரிசுகளை செய்யவுள்ளார்  அதிலும் தமிழருக்கு இந்துக்களுக்கெதிரான செயற்பாடுகளில் ஈடுபடுவாரோஎன்ற கேள்வியும் எழுகின்றது என்றார்..


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை