Skip to main content

மீண்டும் கொரோனா : கட்டாயமாக்கப்பட்ட முககவசம்!

Jan 11, 2024 36 views Posted By : YarlSri TV
Image

மீண்டும் கொரோனா : கட்டாயமாக்கப்பட்ட முககவசம்! 

முகக்கவசம் அணியவேண்டும் 

காய்ச்சல், கொவிட் மற்றும் பிற சுவாச நோய்கள் அதிகரித்து வருவதால், புதன்கிழமை முதல் ஸ்பெயினில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் முககவசங்கள் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.



சுகாதார வசதிகள் மற்றும் மருந்தகங்களில் முகக்கவசங்களின் பயன்பாடு கட்டாயமாக நிறுத்தப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு எடுக்கப்பட்ட அரசாங்க முடிவுகள், சில பிராந்திய நிர்வாகங்களின் எதிர்ப்பை எதிர்கொண்டது.



 நடவடிக்கை

ஆனால் ஸ்பெயினி
ன் புதிய சுகாதார அமைச்சர் மோனிகா கார்சியா அவர்களின் ஆட்சேபனைகளை நிராகரித்து, இந்த நடவடிக்கையை "பொதுவான நடவடிக்கையாக" முன்வைத்துள்ளார் 



திங்களன்று பிராந்திய சுகாதார அதிகாரிகளின் கூட்டத்திற்குப் பிறகு, "நாங்கள் பேசினோம், முககவசங்களின் பங்கைப் பற்றி ஆழமாகப் பிரதிபலித்துள்ளோம் - குறிப்பாக சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் - நோயாளிகள் மற்றும் சுகாதார நிபுணர்கள் இருவரையும் பாதுகாக்கும் வகையில் கலந்துரையாடினோம்," என்று அவர் திங்களன்று பிராந்திய சுகாதார அதிகாரிகளின் கூட்டத்திற்குப் பிறகு அவர்  கூறினார்.



இந்த சூழலில் ஸ்பெயின் நாட்டின் வெலெனிக்கா, கடலொனியா, முர்சியா ஆகிய மாகாணங்களில் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் கூறப்பட்டுள்ளது .


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை