சி.எஸ். கே. வரலாற்றில் அப்படி நடந்ததே இல்லை...! சி. எஸ் .கே நிர்வாகி...!
Dec 24, 2023 22 views Posted By : YarlSri TV
சி.எஸ். கே. வரலாற்றில் அப்படி நடந்ததே இல்லை...! சி. எஸ் .கே நிர்வாகி...!
சிஎஸ்கே வரலாற்றில் எந்த இளம் வீரருக்கும் ரூ.8.40 கோடி கொடுத்து வாங்கியதில்லை என்றும், இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர்ஸ்டார் வீரராக சமீர் ரிஸ்வி இருப்பார் என்று சென்னை அணி சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் மினி ஏலத்தில் சென்னை அணி தரப்பில் 20 வயதே ஆகும் சமீர் ரிஸ்வியை ரூ.8.40 கோடி கொடுத்து ஏலத்தில் வாங்கியது. ஐபிஎல் மினி ஏலத்தை பொறுத்தவரை அம்பாதி ராயுடுவின் இடத்தை நிரப்புவது தான் சிஎஸ்கே அணி நிர்வாகத்தின் முதன்மை நோக்கமாக இருந்தது. அதனை வெளிநாட்டு வீரர் டேரல் மிட்செலை ரூ.14 கொடுத்து வாங்கியதன் மூலமாக நிரப்பியதாக பார்க்கப்பட்டது.
ஆனால் இந்திய அணிக்காக ஆடாத சமீர் ரிஸ்வியை பல்வேறு அணிகளுடன் போட்டிப்போட்டு ரூ.8.40 கோடிக்கு சிஎஸ்கே அணி வாங்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் கடந்த சில ஆண்டுகளாக சிஎஸ்கே அணி நிர்வாகம் அனுபவ வீரர்களை வாங்குவதிலேயே குறியாக இருந்தது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் இளம் வீரர்களை ஒப்பந்தம் செய்வதில் தீவிரம் காட்டியது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago