Skip to main content

பல்லாயிரக்கணக்காக வீரர்களை இழந்த ரஷ்யா! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட உக்ரைன்

Dec 17, 2023 18 views Posted By : YarlSri TV
Image

பல்லாயிரக்கணக்காக வீரர்களை இழந்த ரஷ்யா! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட உக்ரைன் 

ஒரு வருடத்திற்கும் மேலாக உக்ரைன் ரஷ்யப்போர் இடம்பெற்று வருகின்றது  



இந்நிலையில் சனிக்கிழமை உக்ரைன் ஆயுதப் படையின் ஜெனரல் வெளியிட்ட தகவலில், ரஷ்யா கடந்த 7 நாட்களில் மட்டும் 6,700 ராணுவ வீரர்களை இழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



நேற்றைய தினத்தில் மட்டும் 930 ராணுவ வீரர்களை இழந்து இருப்பதாகவும், இந்த வாரத்தில் உள்ள 3 நாட்களில் ரஷ்யா 1000க்கும் அதிகமான வீரர்களை இழந்து இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஆனால் உக்ரைனின் புள்ளி விவரங்கள் மற்ற மதிப்பீடுகளை விட அதிகமாக இருப்பதால் ரஷ்ய வீரர்கள் இழப்பினை சரியாக கணக்கிடுவது கடினமாக உள்ளது.



கடந்த ஒக்டோபரில் பிரித்தானிய பாதுகாப்பு அதிகாரிகள் வழங்கிய தகவலில், 1,90, 000 வீரர்களை ரஷ்ய ராணுவ இழந்து இருப்பதாக தெரிவித்து இருந்தது.



இதனை தொடர்ந்து டிசம்பர் 12ம் திகதி அமெரிக்க உளவுத்துறை வெளியிட்ட அறிக்கையில் ரஷ்யா 3,60,000 வீரர்களை இழந்து இருப்பதாக தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை