Skip to main content

மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான மினி ஏலம் இன்று!

Dec 09, 2023 35 views Posted By : YarlSri TV
Image

மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான மினி ஏலம் இன்று! 

மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான மினி ஏலம் இன்று மாலை  3 மணிக்கு மும்பையில் நடக்கவுள்ளது.  இந்த மினி ஏலத்தில் பங்கேற்க 104 இந்திய வீராங்கனைகள், 61 வெளிநாட்டு வீராங்கனை உட்பட மொத்தமாக 165 வீராங்கனைகள் பதிவு செய்துள்ளனர். அதிலும் அசோசியேட் நாடுகளை சேர்ந்த 15 வீராங்கனைகள் பதிவு செய்துள்ளதால், மினி ஏலம் மீதான எதிர்பார்ப்புஅதிகரித்துள்ளது.



இந்த 165 வீராங்கனைகளில் 56 வீராங்கனைகள் தேசிய அணிக்காக விளையாடியவர்களாகவும், 109 வீராங்கனைகள் உள்ளூர் வீராங்கனைகளாகவும் உள்ளனர். 5 அணிகளின் மொத்த தேவையே 21 உள்ளூர் வீராங்கனைகள் மற்றும் 9 வெளிநாட்டு வீராங்கனை என்று 30ஆக மட்டுமே உள்ளது. அடுத்த சீசனுக்கான மகளிர் பிரீமியர் லீக் தொடர் பெப்ரிவரி - மார்ச் மாதங்களில் நடக்கவுள்ளமை  குறிப்பிடத்தக்கது .


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை