Skip to main content

பஞ்சாபி ஸ்டைல் பட்டர் சிக்கன் !

Aug 26, 2023 38 views Posted By : YarlSri TV
Image

பஞ்சாபி ஸ்டைல் பட்டர் சிக்கன் !  

 சிக்கனை எப்போதும் ஒரே மாதிரி சமைத்து சாப்பிடுவதைவிட கொஞ்சம் வித்யாசமாக சிக்கனில் பட்டர் சிக்கன் செய்து சாப்பிட்டுப்பாருங்கள். இந்த பட்டர் சிக்கன் சப்பாத்தி, பூரி, நாண் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக குழந்தைகளும் விரும்பி உண்பார்கள்.



தேவையான பொருட்கள்




  • சிக்கன் - 1/2 கிலோ

  • உப்பு - தேவைக்கேற்ப

  • கரம் மசாலா - 1 டீஸ்பூன்

  • எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்

  • காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

  • சீரகத் தூள் - 1 டீஸ்பூன்

  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்

  • மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

  • தயிர் - 1/4 கப்



மசாலா செய்வதற்கு




  • வெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

  • சீரகம் - 1 டீஸ்பூன்

  • பட்டை - 1 துண்டு

  • ஏலக்காய் - 2

  • பச்சை மிளகாய் - 2 (கீறியது)

  • முந்திரி - 20 (நீரில் ஊற வைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும்)

  • காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

  • சீரகத் தூள் - 2 டீஸ்பூன்

  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்

  • தக்காளி - 6 (அரைத்தது)

  • உப்பு - சுவைக்கேற்ப

  • சர்க்கரை - 2 டீஸ்பூன்

  • கசூரி மெத்தி - 1 டேபிள் ஸ்பூன்

  • கரம் மசாலா - 1 டீஸ்பூன்

  • எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

  • மில்க் க்ரீம் - 1/2 கப்

  • கொத்தமல்லி - சிறிது

    செய்முறை



    முதலில் சிக்கனை நன்றாக கழுவி எடுத்துக்கொள்ளவும்.



    பின் ஒரு பாத்திரத்தில் கழுவி வைத்த சிக்கனை போட்டு அதனுடன் தயிர்,இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத் தூள், கரம் மசாலா, எலுமிச்சை சாறு மற்றும் தேவயானளவு உப்பு சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.




  • அதனை பிரிட்ஜில் குறைந்தது ஒரு மணி நேரமாவது ஊற வைத்துக்கொள்ளவும்.சிக்கன் ஊறியதும், ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.




  • பின்பு மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.




  • அடுத்து அதில் அரைத்த தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்றாக வதக்க வேண்டும்.பின் அதில் மிளகாய் தூள், சீரகத் தூள், சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.




  • பின் முந்திரி விழுதை சேர்த்து கிளறி விட்டு , குறைவான தீயில் வைத்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.



    பின்பு கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி விடவும் , தொடர்ந்து சிக்கன் துண்டுகளை சேர்த்து, குறைவான தீயில் வைத்து, சிக்கன், 10-15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.




  • இறுதியாக அதில் கசூரி மெத்தியை கையால் நசுக்கி தூவி, கரம் மசாலாவை சேர்த்து கிளறி இறக்கி, மேலே வெண்ணெய் மற்றும் மில்க் க்ரீம்மை சேர்த்து, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான பட்டர் சிக்கன் தயார்.    




Categories: சமையல்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

3 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

3 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

3 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

3 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

3 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

6 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை