Skip to main content

வாயில் எச்சில் ஊற அன்னாசிப்பழ பாயாசம்........

Aug 25, 2023 27 views Posted By : YarlSri TV
Image

வாயில் எச்சில் ஊற அன்னாசிப்பழ பாயாசம்........ 

 அனைவருக்கும் பிடித்த பழமாக இருப்பது அன்னாசி. பாயாசம் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அதில் பால் பாயாசம், பருப்புப் பாயாசம், அவல் பாயாசம் என பல வகைகள் உள்ளது. சிலர் வித்தியாசமான முறையில் வீட்டில் இருந்து ஒரு சில உணவை செய்து பார்ப்பார்கள்.அதைவைத்து எப்படி சுவையான ஒரு அன்னாசிப்பழபாயாசம் செய்யலாம் என இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.



தேவையான பொருட்கள்




  • அன்னாசிப்பழத் துண்டுகள்- 1 கப்

  • காய்ச்சிய பால் - 1 லிட்டர்

  • ஜவ்வரிசி - 1/2 கப்

  • நெய் - தேவையான அளவு

  • பைனாப்பிள் எசன்ஸ் - 1 தே.கரண்டி

  • கன்டென்ஸ்டு மில்க் - 1 கப்

  • முந்திரி - தேவையான அளவு

  • கிஸ்மிஸ் - தேவையான அளவு                                                                                                                                                                                                                               செய்முறை => முதலில் அன்னாசி பழத்தை சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்து ஜவ்வரிசியை கழுவி தண்ணீர் ஊற்றி ஊறவைத்துக்கொள்ளவும்.பின் ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி காய்ச்சி தனியாக வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டவுடன், ஜவ்வரிசியை போட்டு 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து தண்ணீர் போகும் வரை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.பால் கொதித்தவுடன் அதில் வெட்டி வைத்த அன்னாசி துண்டுகளை சேர்த்துக்கொதிக்க வைத்து, ஜவ்வரிசியை சேர்த்து 3 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.இறுதியில் ன்டென்ஸ்டு மில்க், அன்னாசி எசன்ஸ் மற்றும் நெய்யில் வறுத்தெடுத்த முந்திரியை இதனுடன் சேர்த்து கிளறி எடுக்கவும்.


  • சுவையான அன்னாசிப்பழ பாயாசம் ரெடி!




Categories: சமையல்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை