Skip to main content

அனைத்து வைத்தியசாலைகளிலும் அடையாள வேலைநிறுத்தம் - நிறைவுகாண் வைத்திய அதிகாரிகளின் ஒன்றிணைந்த சங்கம் தெரிவிப்பு.

Aug 24, 2023 38 views Posted By : YarlSri TV
Image

அனைத்து வைத்தியசாலைகளிலும் அடையாள வேலைநிறுத்தம் - நிறைவுகாண் வைத்திய அதிகாரிகளின் ஒன்றிணைந்த சங்கம் தெரிவிப்பு. 

இன்று(24) காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக நிறைவுகாண் வைத்திய அதிகாரிகளின் ஒன்றிணைந்த சங்கம் தெரிவித்துள்ளது.



7  முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக சங்கத்தின் தலைவர் ரவீ குமுதேஷ் தெரிவித்தார்.



கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள், ஆய்வக விஞ்ஞானி வல்லுநர்கள் மற்றும் தொழில்சார் சிகிச்சை நிபுணர்கள் ஆகிய 05 தொழில்முறை சங்கங்கள் இந்த வேலைநிறுத்த நடவடிக்கையில் இணைந்துள்ளன.



இன்று(24) காலை 8 மணி முதல் நாளை(25) காலை 8 மணி வரை 24 மணித்தியாலங்களுக்கு இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.



புற்றுநோய் நிலையங்கள், தாய்மார் மற்றும் சிறுவர்களுக்கான வைத்தியசாலைகள் மற்றும் மத்திய இரத்த வங்கிகள் என்பன இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என ரவீ குமுதேஷ் தெரிவித்தார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

12 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை