Skip to main content

தமிழகத்தில் 5 கோடி பனை விதைகள் நடும் திட்டம் துவக்கம்!

Oct 27, 2020 240 views Posted By : YarlSri TV
Image

தமிழகத்தில் 5 கோடி பனை விதைகள் நடும் திட்டம் துவக்கம்! 

தமிழகம் முழுவதும் பொது இடங்களில் 5 கோடி பனைவிதைகள் நடும் திட்டத்தை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த ஓடத்துறை ஏரி பகுதியில் இன்று தொடங்கிவைத்தார். ஜெயம் பிராணி நல அறக்கட்டளை, பனை விதைப்பு இயக்கம் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தன்னார்வலர்கள் கலந்துகொண்டு, ஏரி கரையில் பனை விதைகளை நட்டனர்.



இதுகுறித்து பேசிய அந்த அமைப்பினர், தமிழகம் முழுவதும் தொண்டு நிறுவனங்களின் மூலம் பனை விதைகள் சேகரிக்கப்பட்டு, ஏரி, குளம், குட்டை மற்றும் வாய்க்கால் பகுதிகளில் அடுத்த 3 மாதங்களுக்குள் நடப்படும் என தெரிவித்தனர். மேலும், வரும் நாட்களில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப் படுவதால் இந்த பனை விதைகள் முளைப்பதற்கு ஏதுவான சூழ்நிலை இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், இந்த பனை விதைகள் முளைத்து வளரும்போது அதன் வேர்கள் நீர்நிலைகளின் கரைகளில் மண் அரிமானத்தை தடுக்கும் என்றும், அடுத்த 15 ஆண்டுகளில் இவை பலன் தர துவங்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை