Skip to main content

கிறிஸ்ப்பியான வடைய செய்ய ,  ஒரு கப் ரவை இருந்தா போதும்

Aug 11, 2023 31 views Posted By : YarlSri TV
Image

கிறிஸ்ப்பியான வடைய செய்ய ,  ஒரு கப் ரவை இருந்தா போதும் 

வடை என்றால் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இதில் பல வகை உண்டு ஒரு சிலருக்கு பருப்பு வடை பிடிக்கும் ஒரு சிலருக்கு மெதுவடை என மாறுமே தவிர மற்றபடி வடை என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு தான். அப்படியான ஒரு வடை ரெசிபியை ரொம்பவே சுலபமாக அதே நேரத்தில் அதிக டேஸ்ட் உடன் இருப்பதோடு மட்டுமில்லாமல் வித்தியாசமாக ரவையை வைத்து எப்படி உடனடியாக செய்வது என்று தான் இந்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.



    ரவை வடை செய்முறை விளக்கம்



           இந்த வடை செய்வதற்கு முதலில் , 



  - ஒரு மீடியம் சைஸ் வெங்காயம்



  - இரண்டு பச்சை மிளகாய்



  - ஒரு துண்டு இஞ்சி தோல் சீவி



  -  ஒரு கைப்பிடி கருவேப்பிலை



  -  ஒரு கைப்பிடி கொத்தமல்லி



                                                              இவை அனைத்தையும் நல்ல பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் ஒரு முழு கேரட்டை தோல் நீக்கி துருவி இதையும் தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.



இப்போது ஒரு பவுலில் நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி, ஒரு ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் உப்பு, கால் டீஸ்பூன் பெருங்காயம் இவையெல்லாம் சேர்த்து ஐந்து நிமிடம் வரை நன்றாக பிசைந்து விடுங்கள். இப்படி செய்யும் போதே வெங்காயத்திலிருந்து நீர் விட்டு நாம் சேர்த்திருக்கும் பொருள்கள் எல்லாம் ஒன்றாக கலக்கும். இதன் பிறகு துருவிய கேரட்டை சேர்த்து அதையும் ஐந்து நிமிடம் பிசைந்து கொடுங்கள்.



இவையெல்லாம் நன்றாக கலந்த பிறகு ரவையை சேர்த்து மறுபடியும் இதே போல செய்ய வேண்டும். தண்ணீர் ஊற்றக் கூடாது இது மிக முக்கியம். இப்படி பிசைந்த பிறகு ரவை ஓரளவுக்கு கையில் எடுத்து பிடித்தால் உருண்டையாக பிடிக்கும் அளவிற்கு வர வேண்டும் இப்போது கால் கப் தயிரை சேர்த்துக் கொள்ளுங்கள். தயிர் அதிகம் புளிக்காத தயிராக இருந்தால் நல்லது.



தயிர் சேர்த்த பிறகு இவை அனைத்தையும் மீண்டும் ஒரு முறை நன்றாக பிசைந்த பிறகு தட்டு போட்டு பத்து நிமிடம் வரை மூடி விடுங்கள். இப்படி செய்வதன் மூலம் ரவை ஊறுவதோடு மற்ற பொருட்களில் எல்லாம் இந்த தயிரும் ஊறி வடை ஒரு வித்தியாசமான சுவையில் கிடைக்கும். இந்த நேரத்திற்குள்ளாக அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு படுத்திக் கொள்ளுங்கள்.



எண்ணெய் சூடானவுடன் அடுப்பை மிதமான தீக்கு மாற்றிய பிறகு நீங்கள் கலந்து வைத்திருக்கும் மாவில் இருந்து ஒரு சிறிய உருண்டை எடுத்து வாழை இலையில் எண்ணெய் தடவி தட்டி ஒவ்வொன்றாக போட்டு எடுங்கள். வாழை இலை இல்லாத பட்சத்தில் கையிலும் லேசாக எண்ணெய் தடவிய பிறகு வடையை தட்டுங்கள் அப்போது தான் ஒட்டாமல் சுலபமாக வரும்.



ஒவ்வொன்றாக போட்டு ஒரு புறம் சிவந்த பிறகு மறுபடியும் திருப்பி போட்டு எடுத்து விடுங்கள். சுவையான இன்ஸ்டன்ட் ரவை வடை தயார். இந்த வடையை நீங்கள் ஒரு முறை செய்தால் போதும். இனி அடிக்கடி இதை தான் செய்வீர்கள். அது மட்டும் இன்றி இது செய்வது மிகவும் சுலபம்.


Categories: சமையல்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

20 Hours ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

20 Hours ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

20 Hours ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

20 Hours ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

20 Hours ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

20 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

4 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை