Skip to main content

இலந்தையின் மருத்துவ பயன்கள்

Sep 22, 2022 86 views Posted By : YarlSri TV
Image

இலந்தையின் மருத்துவ பயன்கள் 

இது இரத்த சுத்திக்கும், முதுகுவலி, இருதயநோய், ஆஸ்துமா, கழுத்து நோய், கண் தெரிய, இரத்த அழுத்தத்தைக் குறைக்க, தலைவலி, மன உளைச்சலைப் போக்க, எந்த வலியையும் போக்கவும் வல்லது. 



இலந்தை இலை 1 பிடி, மிளகு 6, வெ. பூண்டுப் பல் 4 அரைத்து மாதவிலக்கான முதல் 2 நாட்கள் கொடுத்து வரக் கருப்பை குறைபாடுகள் நீங்கிப்  புத்திர பாக்கியம் கிட்டும்.



இலந்தைப் பட்டை 40 கிராம், மாதுளம் பட்டை 40 கிராம் சிதைத்து, அரை லீட்டர் நீரில் போட்டுக் கொதிக்க வைத்து 125 மி.லி.யாக்கி 4 வேளை தினம் குடித்து வர நாள்பட்ட பெரும்பாடு நீங்கும்.



இலந்தை வேர்பட்டை சூரணம் 4 சிட்டிகை இரவில் வெந்நீரில் கொள்ளப் பசியின்மை நீங்கும். துளிர் இலையையாவது பட்டையையாவது 5 கிராம் நெகிழ அரைத்துத் தயிரில் காலை மாலையாகக் கொடுக்க வயிற்றுக் கடுப்பு, இரத்தப்பேதி தீரும்.



இலந்தை இலை தசை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும். வேர், பட்டை பசித் தூண்டியாகவும் பழம் சளி நீக்க, மலமிளக்கு பசியை மிகுக்கக் கூடியதாகவும் பயன்படுகிறது.


Categories: மருத்துவம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை