Skip to main content

பதவி போட்டியில் இருந்து விலக மாட்டேன்- சசிதரூர் திட்டவட்டம் !...

Oct 09, 2022 84 views Posted By : YarlSri TV
Image

பதவி போட்டியில் இருந்து விலக மாட்டேன்- சசிதரூர் திட்டவட்டம் !... 

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வருகிற 17-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சசிதரூர் எம்.பி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் காந்தி குடும்பத்து ஆதரவு மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இருப்பதாக தகவல்கள் பரவுகின்றன. மேலும் சசிதரூரை போட்டியில் இருந்து வாபஸ் பெற பலர் வற்புறுத்துவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி மறுத்துள்ளார். தங்கள் குடும்பம் யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை என்றும் தேர்தல் நியாயமாக நடக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த சூழலில் தலைவர் தேர்தல் போட்டியில் இருந்து விலக சசிதரூர் முடிவு செய்திருப்பதாக நேற்று தகவல்கள் வந்தன. இந்த தகவலை சசிதரூர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தனக்கும் மல்லிகார்ஜூன கார்கேவுக்கும் நடப்பது நட்பு போட்டி. இதில் இருந்து நான் விலகப்போவது இல்லை. ஓட ஆரம்பித்து விட்டேன். இனி நிறுத்தப்போவதில்லை. இறுதி வரை போராடுவேன் என்று அவர் கூறியுள்ளார்.



 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

1 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

1 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

1 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

1 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

1 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

1 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

4 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை