Skip to main content

இவ்வளவு நாள் ரஷ்யாவை தாக்குபிடித்துகொண்டிருக்கம் உக்ரைன் பயன்படுத்தும் ஆயுதங்கள் என்ன தெரியுமா?

Mar 19, 2022 73 views Posted By : YarlSri TV
Image

இவ்வளவு நாள் ரஷ்யாவை தாக்குபிடித்துகொண்டிருக்கம் உக்ரைன் பயன்படுத்தும் ஆயுதங்கள் என்ன தெரியுமா? 

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கிடையில் தொடர்ந்து 23 நாட்களாகப் போர் நடைபெற்றுக்கொண்டிருப்பதுடன் அந்த போரினால் உலகப் போர் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளபோது, ரஷ்யாவின் தொடர் தாக்குதலை தாக்குப்பிடித்துக்கொண்டிருக்கும் உக்ரைன் பயன்படுத்தும் ஆயுதங்கள் பற்றி செய்தி தொகுப்பு  ஒன்றை சர்வதேச ஊடகம் வெளியிட்டுள்ளது.



இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது, 



அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மன் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவின் தாக்குதல்களை முறியடிக்கும் அதிநவீன ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கி இருப்பதாலேயே ரஷ்யாவின் யுத்தத்தை எதிர்கொள்ள முடிகிறது



ரஷ்யாவின் யுத்தத்தை எதிர்கொள்ள அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் ஆயுத உதவிகளை வழங்க வேண்டும் என்பது உக்ரைனின் வேண்டுகோள். உக்ரைன் மீதான யுத்தம் நடத்தி வரும் ரஷ்யா அதிபர் புதினை போர்க்குற்றவாளி என அமெரிக்க நாடாளுமன்றம் குற்றம்சாட்டி தீர்மானம் நிறைவேற்றியது.



அத்துடன் 800 மில்லியன் டொலர் மதிப்பிலான (சுமார் ரூ6,000 கோடி) ஆயுதங்களை வழங்குவோம் என்றும் அமெரிக்கா அதிபர் ஜோ பிடன் உறுதி அளித்தார். ஜோ பிடன் அறிவித்த ஆயுத விநியோகங்கள் பட்டியலில் 800 வீரர்கள் அல்லது ஸ்டிரிங்கர்கள் கைகளில் எடுத்து செல்லக் கூடிய வான்பாதுகாப்பு கருவி, 200 ஜாவ்லின் என்கிற டாங்கிகளை தாக்கி அழிக்கக் கூடிய ஆயுதங்கள், 100 டிரோன்கள் உள்ளிட்டவை அடங்கும். துருக்கியும் டிரோன்களை வழங்கி உள்ளது.குறிப்பாக உக்ரைனுக்கு ரஷ்யா தயாரிப்பான எஸ்-300 ஏவுகணைகளை அமெரிக்கா வழங்கி இருக்கிறது. ஐரோப்பிய நேட்டோ நாடுகள் இவைகளை ஏற்கனவே உக்ரைனுக்கு கொடுத்திருக்கின்றன.



இந்த அதிநவீன ஏவுகணைகளை உக்ரைன் ஏற்கனவே பயன்படுத்தி இருப்பதால் அந்நாட்டு ராணுவத்தினரால் எளிதாக கையாள முடியும். NLAW எனப்படும் ஏவுகணைகளும் பெரும் எண்ணிக்கையில் உக்ரைனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து மட்டுமே 3615 ஏவுகணைகளை கொடுத்திருக்கிறது. ஜெர்மனி 1,000; நார்வே 2,000; ஸ்வீடன் 5,000 ஏவுகணைகளை வழங்கியுள்ளன. இந்த ஏவுகணைகளையும் உக்ரைன் வீரர்கள் டாங்கிகள் மீது பொருத்தி ரஷ்யா துருப்புகளை அழித்து வருகின்றனர். Bayraktar TB2 டிரோன்கள் துருக்கியால் வழங்கப்பட்டவை. இதனை கீவ் நகரில் உக்ரைன் ராணுவத்தினர் பயன்படுத்துகின்றனர்.



குறைந்த எண்ணிக்கையில் இந்த டிரோன்கள் பயன்படுத்தப்பட்டாலும் துல்லியமான தாக்குதல் திறன் கொண்டது. இந்த டிரோன்கள் 27 மணிநேரம் தொடர்ந்து 25,000 அடி உயரத்திலும் பறக்கக் கூடிய திறனை பெற்றவை. மேலும் எம்ஐ 17 ரக ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட கூடுதல் ஆயுதங்களையும் வழங்குவதாக அமெரிக்கா உறுதி அளித்துள்ளது. இத்தகைய உக்கிரமான ஆயுதங்கள், ஏவுகணைகள் மூலமாகவே ரஷ்யாவின் யுத்தத்தை 20 நாட்களுக்கு மேலாக உக்ரைனால் தாக்குப் பிடிக்க முடிகிறது என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை