Skip to main content

நேட்டோ விவகாரம் - ரஷ்யா எச்சரிக்கை மணி

May 14, 2022 84 views Posted By : YarlSri TV
Image

நேட்டோ விவகாரம் - ரஷ்யா எச்சரிக்கை மணி 

நேட்டோவில் இணைந்து கொள்ளும் சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளின் தீர்மானமானது பிராந்தியத்தின் இராணுவ மயமாக்கலுக்கு அச்சுறுத்தலாக அமையும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.



தனது எல்லைக்கு அருகில் நேட்டோ ஆயுதங்களை நிலைநிறுத்தினால் பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.





ஜேர்மனியின் தலைநகர் பேர்லினில் இன்று மாலை நடைபெறவுள்ள நேட்டோ வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டத்தில் சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் பார்வையாளர்காக கலந்து கொள்ளவுள்ளன.



இந்தக் கலந்துரையாடலின் பின்னர் நேட்டோவில் இணைவது குறித்து இரு நாடுகளும் விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



நேட்டோ விவகாரம் - ரஷ்யா எச்சரிக்கை மணி



 



இரு நாடுகளும் மேற்குலக நாடுகளின் இராணுவ கூட்டணியில் அங்கம் வகிக்காத பட்சத்தில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேட்டோவில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன.



இந்த நிலையிலேயே இரு நாடுகளும் நேட்டோவில் இணைந்து கொள்வதை அச்சுறுத்தலாக நோக்குவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.





இதேவேளை, உக்ரைனின் கார்கிவ் நகரிலிருந்து தமது படைகளை திரும்ப பெறுவதில் ரஷ்யா கவனம் செலுத்தியுள்ளதாக உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை