Skip to main content

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு இரகசியமாக கொண்டு வரப்படும் பீட்ரூட் - வர்த்தகர்கள் விடுத்துள்ள கோரிக்கை

Feb 06, 2022 89 views Posted By : YarlSri TV
Image

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு இரகசியமாக கொண்டு வரப்படும் பீட்ரூட் - வர்த்தகர்கள் விடுத்துள்ள கோரிக்கை 

யாழ்ப்பாணத்தில் பீட்ரூட் அறுவடை செய்யப்படும் நேரத்தில் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு இரகசியமாக பீட்ரூட் கொண்டு வரப்படுவதை நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .



அதேவேளை , யாழ்ப்பாணத்தின் பீட்ரூட் மரக்கறி தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைத்துள்ளதை அடுத்து அதன் விலை சுமார் 100 ரூபாய் குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.



கடந்த மாதம் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கிராம் பீட்ரூட்டின் மொத்த விற்பனை 350 ரூபாவாக இருந்ததுடன் அது தற்போது 250 ரூபாவாக குறைந்துள்ளது.



இதனுடன் பொருளாதார மத்திய நிலையத்திற்கு ஏனைய மரக்கறிகளின் வரவு அதிகரித்துள்ளதால், அவற்றின் விலைகளும் 40 வீதத்தால் குறைந்துள்ளது.



கடந்த மாதத்தில் வேகமாக அதிகரித்து காணப்பட்ட மரக்கறிகளின் விலைகள் கிலோவுக்கு 50 டுதல் 100 ரூபாய் வரை குறைந்துள்ளன. பீட்ரூட் இந்த விலை மட்டத்தில் இருக்குமாயின் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை