Skip to main content

72மணி நேரத்தில் மற்றுமொரு சிக்கலில் மாட்டிக்கொண்ட இலங்கை மக்கள்! அமைச்சரின் இறுதி முடிவு வெளியானது.

Jan 17, 2022 83 views Posted By : YarlSri TV
Image

72மணி நேரத்தில் மற்றுமொரு சிக்கலில் மாட்டிக்கொண்ட இலங்கை மக்கள்! அமைச்சரின் இறுதி முடிவு வெளியானது. 

கடந்த வாரம் மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நாடளாவிய ரீதியில் சில பகுதிகளில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டது.



அதனை மீளமைப்பதற்காக இரண்டு தடவைகளில் 3,000 மெற்றிக் டன் டீசல் வழங்கப்பட்டதுடன், இனி டொலர்கள் இன்றி அவ்வாறு எரிபொருளை வழங்க முடியாது என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார். 

இலங்கை மின்சார சபை டொலர்களை வழங்கினால், மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்து வழங்க முடியும் என அவர்  மேலும் தெரிவித்துள்ளார்.



இலங்கை மின்சார சபைக்கு வழங்குவதற்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.



தற்போது கையிருப்பில் உள்ள எரிபொருளை மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்கினால், வாகனங்களுக்கான எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.



எரிபொருள் இல்லாவிட்டால் இரண்டு மணித்தியாலங்களுக்கு மின்சாரத்தை துண்டித்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது சாத்தியமென்றும், வாகன சாரதிகளால் அவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது என்றும் வலுசக்தி அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.





 

இவ்வாறான முடிவு எடுக்கப்படுமாக இருந்தால் மக்கள் பாரிய நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும் என அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை