Skip to main content

ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற நினைப்பவர்களைத் தடுக்கக் கூடாது - உலக நாடுகள் வலியுறுத்தல்....

Aug 31, 2021 128 views Posted By : YarlSri TV
Image

ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற நினைப்பவர்களைத் தடுக்கக் கூடாது - உலக நாடுகள் வலியுறுத்தல்.... 

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் சென்றதையடுத்து, உலக நாடுகள் பலவும் ஆப்கனில் இருக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கையில் உடனடியாக இறங்கின.



இதற்கிடையில், தலிபான்களின் கொடுங்கோல் ஆட்சியின் கீழ் வாழ விரும்பாத ஆப்கன் மக்களும் நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கினர். ஆனால், காபூல் விமான நிலையம் நோக்கி வரும் ஆப்கன் மக்களை தலிபான்கள் துப்பாக்கி முனையில் விரட்டியடிப்பதாக தகவல் வெளியானது.



இந்நிலையில், ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற நினைப்பவர்களைத் தடுக்க மாட்டோம் என்ற வாக்குறுதியை தலிபான்கள் நிறைவேற்ற வேண்டும் என அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்பட 90 நாடுகள் விடுத்த கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.



ஆப்கானிஸ்தானில்  வசிக்கும் வெளிநாட்டவர்கள் மற்றும் ஆப்கானிஸ்தானியர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தலிபான்கள் எந்தவிதத் தடையும் விதிக்கக் கூடாது எனவும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.



இந்தக் கூட்டறிக்கையில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து, உக்ரைன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டுள்ளனர்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை