Skip to main content

கொரோனா சடலங்களை தகனம் செய்தல் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள முடிவு!

Aug 13, 2021 157 views Posted By : YarlSri TV
Image

கொரோனா சடலங்களை தகனம் செய்தல் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள முடிவு! 

கொரோனா தொற்றினால் இறக்கும் நபர்களின் உடல்களை தகனம் செய்யும் போது, இறந்தவரின் குடும்பத்தினரிடம் எவ்வித கட்டணங்களையும் அறவிடுவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது என அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சித்துறை அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.



இதனடிப்படையில் கட்டணங்களை அறவிட வேண்டாம் என உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் செலவாகும் பணத்தை உள்ளூராட்சி சபைகளுக்கு அரசாங்கம் வழங்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



உள்ளூராட்சி சபைகளின் பிரதானிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துளளார்.



தொமர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 



உடல்களை தகனம் செய்ய தேவையான எரிவாயுவை மிக விரைவில் இலவசமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.



நாடு முழுவதும் 240க்கும் மேற்பட்ட சுடுகாடுகள் இருப்பதால், எவ்வித பிரச்சினையும் இன்றி கொரோனாவால் இறப்போரின் உடல்களை தகனம் செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை