Skip to main content

ஆப்கானிஸ்தான் அதிபருடன் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு!

Jul 16, 2021 171 views Posted By : YarlSri TV
Image

ஆப்கானிஸ்தான் அதிபருடன் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு! 

உஸ்பெகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் அந்நாட்டின் தாஷ்கண்ட் நகரில், ஆப்கானிஸ்தான் நாட்டு அதிபர் அஷ்ரப் கனியை சந்தித்துப் பேசினார்.



ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக ராணுவம் மற்றும் தலிபான் பயங்கரவாதிகள் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுக்கு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் ஆதரவாக உள்ளனர்.



அமெரிக்கப் படையினர் வெளியேறி வரும் சூழலில், தலிபான்கள் நாட்டின் நிலப்பரப்புகளைக் கைப்பற்றி வருகின்றனர்.  அந்த நாட்டின் 421 மாவட்டங்களில் 3ல் ஒரு பகுதி தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளது என கூறப்படுகிறது.



இதில் ஏராளமான மாவட்டங்கள் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ஈரான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளுடனான எல்லைப் பகுதிகளாகும்.



இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி உடன் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நடத்திய சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.



இதுதொடர்பாக, மத்திய மந்திரி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடப்பு சூழல் பற்றி இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் நாட்டின் வளர்ச்சி, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றுக்கான நம்முடைய ஆதரவு இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மீண்டும் வலியுறுத்தப்பட்டு உள்ளது என்றார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை