Skip to main content

வறுமை நிலையை இழிவளவாக்க முறையான பயிற்சிகளை பெற்று சமூகத்தில் சிறந்த பிரஜைகளாக மிளிர வேண்டும் என மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்!

Nov 16, 2020 266 views Posted By : YarlSri TV
Image

வறுமை நிலையை இழிவளவாக்க முறையான பயிற்சிகளை பெற்று சமூகத்தில் சிறந்த பிரஜைகளாக மிளிர வேண்டும் என மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்! 

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒர் இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தில் முதற்கட்டமாக இணைக்கப்பட்ட நீங்கள் உங்கள் குடும்பத்தின் வறுமை நிலையை இழிவளவாக்க முறையான பயிற்சிகளை பெற்று சமூகத்தில் சிறந்த பிரஜைகளாக மிளிர வேண்டும் என மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.



மேன்மை தங்கிய ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு என்ற தொனிப்பொருளில் நாட்டின் வறுமைக்குட்பட்டோரிற்கு தொழில் வாய்ப்பு வழங்குவதற்காக உருவாக்கப்பட்டதே தேசிய இளைஞர் படையணி ஆகும். இவ் எண்ணக்கருவின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட தேசிய இளைஞர் படையணிக்கான தலைமைத்துவ பயிற்சியின் ஆரம்ப நிகழ்வு இன்று (16) காலை 9 மணிக்கு உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியது.



வடமாகாணத்தில் 306 பேர் முதற்கட்டமாக தேசிய இளைஞர் செயலணியின் கீழ் இணைக்கப்பட்டுள்ளார்கள். அவற்றுள் யாழ்ப்பாண மாவட்டத்தில் 94 பேர் இணைக்கப்பட்டுள்ளார்கள்.



மேலும் மாவட்ட செயலக அரசாங்க அதிபர் பல்நோக்கு செயலணியின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தலைமைத்துவ பயிற்சி 14 நாட்கள் நடைபெறவுள்ளது. எமது அதிமேதகு ஜனாதிபதி பதவியேற்றவுடன் வறுமை நிலையில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்குவதற்காக பல்நோக்கு அபிவிருத்தி செயலணியை உருவாக்கி வறுமையில் உள்ள இளைஞர் யுவதிகளிற்கு பயிற்சிகள் வழங்கி அவர்களை அரச வேலைவாய்ப்பில் இணைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அரசாங்கம் மிகவும் வறியவர்களிற்காக இவ் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பினை வழங்குகிறது. வறுமை நிலையில் உள்ள இளைஞர் யுவதிகள் தங்கள் குடும்ப நிலையை கட்டியெழுப்புவதற்காக இவ் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பு இன்மையினால் பல்வேறு சமூகப் பிறழ்வுகள் சமூகத்தில் ஏற்படுகிறது ஆதலால் அரசாங்கம் இத் தொழில்வாய்ப்பு திட்டத்தினை கொண்டுவந்துள்ளது. எனவே நீங்கள் இத் தொழில் வாய்ப்பு மூலம் பயிற்சி பெற்ற ஒரு தொழிலாளர்களாக மாறுதல் வேண்டும். மேலும் எமது இளைஞர்கள் வறுமைநிலையினால் மத்திய கிழக்கு நாடுகளிற்கு சென்று பல்வேறு துயரங்களுக்கு உள்ளாகிறார்கள். ஒவ்வொருவருக்கும் படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற பேதமில்லாது ஏதோவொரு திறமையுள்ளது ஆதலால் இப் பயிற்சிநெறி திட்டமிட்ட வகையில் முறையாக வழங்கப்படுகிறது. நீங்கள் தொழில்வாண்மையுள்ள தொழிலாளர்களாக மிளிர்ந்து வறுமையை உங்கள் குடும்பத்திலிருந்து இல்லாமல் செய்யவேண்டும் என மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.



அரசாங்க அதிபர் க. மகேசன்,



மேலதிக அரசாங்க அதிபர், மாகாணப் பணிப்பாளர் தேசிய இளைஞர் படையணி, இளைஞர் படையணியின் இணைப்பாளர், தொழில் நுட்ப கல்லூரியின் பணிப்பாளர், இளைஞர் படையணியின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர், பல் நோக்கு அபிவிருத்தி செயலணியின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஒரு இலட்சம் வேலையாப்பில் உள்ளீர்க்கப்பட்ட உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.



மேற்குறித்த நிகழ்வு முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பேணல் மற்றும் அரசாங்கத்தின் அனைத்து சுகாதார வழிகாட்டி நடைமுறைகளையும் பின்பற்றி நடைபெற்றது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை