Skip to main content

கூடங்குளம் அணுமின்நிலையம் விரிவாக்க முயற்சி: மத்திய அரசு கைவிடாவிட்டால் போராட்டம் தொடரும் - திருமாவளவன்

Jun 30, 2021 150 views Posted By : YarlSri TV
Image

கூடங்குளம் அணுமின்நிலையம் விரிவாக்க முயற்சி: மத்திய அரசு கைவிடாவிட்டால் போராட்டம் தொடரும் - திருமாவளவன் 

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக சென்னை ஈவேரா சாலையில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்தின் எதிரில் 3-வது நாளாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் இரா.செல்வம், செல்லத்துரை, கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் செல்வா, கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



போராட்டத்தின் போது இருசக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து மேளம் அடித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:-



பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து தொடர்ந்து இன்று 3-வது நாளாக ஆர்பாட்டம் நடத்தி வருகிறோம். விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.



ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இருக்க வேண்டும் என்பது எங்களது முதல் கோரிக்கை. கொரோனா நிவார நிதியுதவியாக தலா ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.7,500 வழங்க வேண்டும் எனவும் மத்திய அரசு அதற்கான போதிய நிவாரண நிதியை தமிழகத்திற்கு வழங்க வேண்டும்.



தடுப்பூசி வழங்குவதில் மத்திய அரசு ஓரவஞ்சனை காட்டாமல் போதிய தடுப்பூசி தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும். செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்திற்கு உடனடியாக மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும்.



தவறான பொருளாதார கொள்கையாலும் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக மத்திய அரசு செயல்பட்டு பொதுமக்களை பாழங்கிணத்தில் தள்ளியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.



தொடர்ந்து கலத்தில் இணைந்திருந்து தகாத சக்திகளை துரத்தி அனுப்புவோம் என அவர் தெரிவித்தார்.கூடங்குளம் அணுமின் நிலையத்தை விரிவாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும்.



இவ்வாறு அவர் கூறினார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை