Skip to main content

மகாராஷ்டிராவில் இருந்து கர்நாடகம் வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்!

Jun 30, 2021 193 views Posted By : YarlSri TV
Image

மகாராஷ்டிராவில் இருந்து கர்நாடகம் வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்! 

நாட்டில் கொரோனா 2-வது அலை கட்டுக்குள் வந்துள்ளது. தினசரி பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் அதிகமாக பரவத்தொடங்கியுள்ளது. இதை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்தாவிட்டால் கொரோனா 3-வது அலைக்கு வழிவகுக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



இந்த நிலையில் மகாராஷ்டிராவில் இருந்து கர்நாடகம் வருபவர்கள் ஆர்.டி.பி.சி.ஆர். கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. 72 மணி நேரத்திற்கு மிகாமல் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழாக இருக்க வேண்டும். விமானம், ரெயில், பஸ்களில் வருபவர்கள், கொரோனா நெகட்டிவ் சான்றிதழை காட்டினால் மட்டுமே பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்று அரசு தனது உத்தரவில் கூறியுள்ளது.



கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இல்லாதவர்கள் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்றும், அதுகுறித்த சான்றிதழை காட்ட வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அரசியல் சாசன பதவி வகிப்பவர்கள், இறப்புக்காக வருபவர்கள், அவசர சிகிச்சைக்கு வருபவர்கள் மேற்படி எந்த சான்றிதழையும் காட்ட தேவை இல்லை.



ஆனால் அவர்களின் சளி மாதிரியை மட்டும் பரிசோதனைக்கு எடுத்துவிட்டு கர்நாடகத்திற்குள் அனுமதிக்கலாம் என்று அரசு கூறியுள்ளது. மராட்டிய மாநில எல்லையில் அமைந்துள்ள பெலகாவி, பீதர், விஜயாப்புரா, கலபுரகி ஆகிய மாவட்டங்களில் சோதனை சாவடிகளை அமைத்து கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை