Skip to main content

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டணி பாஜகவின் வெற்றிக்கே உதவும்: நானா படோலே

Jun 24, 2021 148 views Posted By : YarlSri TV
Image

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டணி பாஜகவின் வெற்றிக்கே உதவும்: நானா படோலே 

மகாராஷ்டிராவில் கொள்கை முரண்பாடு கொண்ட சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது.



இந்தநிலையில் காங்கிரஸ் தலைவர் நானா படோலே சமீபத்தில் அளித்த பேட்டி கூட்டணி கட்சிகளுக்கு இடையே சலசலப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சி அடுத்து வரும் தேர்தல்களில் தனித்து போட்டியிடும் என கூறினார். இதற்கு சிவசேனா தலைவரும், முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே, தற்போதைய சூழலில் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காமல் தனியாக தேர்தல் பற்றி பேசுபவர்களை மக்கள் செருப்பால் அடிப்பார்கள் என மறைமுகமாக விமர்சித்தார்.



இதற்கு மத்தியில் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பாஜககாங்கிரஸ் கட்சிகளை தவிர்த்து 3-வது அணியை அமைக்கும் முயற்சியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் நானா படோலே ஈடுபட்டு உள்ளார். இது தொடர்பாக 8 கட்சி தலைவர்களை சந்தித்து பேசியதோடு, தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.



இந்த நிலையில் ஜல்காவில் நேற்று காங்கிரஸ் தலைவர் நானா படோலே நிருபர்களிடம் பேசியதாவது:-



காங்கிரஸ் கட்சியின் உதவியின்றி பாஜக எதிர்ப்பு கூட்டணி அமைப்பது என்பது சாத்தியமில்லை. அவ்வாறு செய்தால் அந்த முயற்சிகள் மறைமுகமாக பாஜகவுடைய வெற்றிக்கே உதவும். வேலையின்மை நெருக்கடியை எதிர்கொள்பவர்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் நலனுக்கு காங்கிரஸ் கட்சி முன்னுரிமை அளிக்கும்.



நான் ஏற்கனவே தேர்தலை பற்றி பேசியுள்ளேன். இது கட்சியின் தொண்டர்களை சென்று சேர்ந்துள்ளது. தேர்தல் இன்னும் 3 ஆண்டுகள் தொலைவில் உள்ளது. நான் தற்போது அதைப்பற்றி பேச மாட்டேன்.



கொரோனா தொற்றுநோயை கையாள்வதில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு செய்த தவறுகளையும், விவசாயிகளை அவர்கள் புறக்கணிப்பதையும் நாங்கள் முன்னிலைப்படுத்துவோம்.



இவ்வாறு அவர் கூறினார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை