Skip to main content

புதிய ‘டெல்டா பிளஸ் கொரோனா’ கவலை தரக்கூடியது அல்ல - மத்திய அரசு தகவல்!

Jun 16, 2021 159 views Posted By : YarlSri TV
Image

புதிய ‘டெல்டா பிளஸ் கொரோனா’ கவலை தரக்கூடியது அல்ல - மத்திய அரசு தகவல்! 

சீனாவில் 2019 இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி வருகிறது. இந்தியாவில் அந்த வகையில் உருமாறிய கொரோனா வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டன.



முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்ட ‘பி.1.617.1’ வைரசுக்கு காப்பா என்றும், ‘பி.1.617.2’ வைரசுக்கு டெல்டா என்றும் உலக சுகாதார நிறுவனத்தால் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த டெல்டா வைரஸ்தான் இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலைக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்று சொல்லப்படுகிறது.



இந்த நிலையில், இந்த டெல்டா வைரஸ் உருமாறி உள்ளது. உருமாறிய டெல்டா வைரஸ், ‘டெல்டா பிளஸ்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த புதிய உருமாறிய வைரஸ், கொரோனா வைரசின் ஸ்பைக் புரதத்தில் ‘கே417என்’பிறழ்வால் வகைப்படுத்தப்படுகிறது.



இந்த வைரசால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



இதையும் படியுங்கள்....புதிய கொரோனா வகை ‘டெல்டா பிளஸ்’ கண்டுபிடிப்பு



இதுபற்றி மத்திய அரசு சார்பில் நேற்று கூறப்பட்டதாவது:-



‘டெல்டா பிளஸ்’ வைரஸ் கடந்த மார்ச் மாதம் முதல் காணப்படுகிறது.



அதே நேரத்தில் இந்த வைரஸ் இன்னும் கவலைதரக்கூடிய ஒன்றாக இல்லை. இந்த வைரஸ் பற்றி இன்னும் நாம் நிறைய அறிந்து அதன் முன்னேற்றத்தை கண்காணிக்க வேண்டியதிருக்கிறது.



அதே நேரத்தில் கடந்த மே மாதம் 7-ந் தேதி உச்சம் தொட்டபின்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு நாட்டில் 85 சதவீத அளவுக்கு குறைந்து விட்டது. 20 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 ஆயிரத்துக்கும் குறைவாகவே உள்ளது. 2-வது அலையின்போது 20 வயதுக்கு உட்பட்டவர்களில் பாதிப்பு 11.62 சதவீதம் ஆகும். முதல் அலையில் இந்த விகிதம், 11.31 சதவீதம் ஆகும்.



மே மாதம் 4-ந் தேதிக்கும், 10-ந் தேதிக்கும் இடையே வாராந்திர பாதிப்பு விகிதம் 21.4 சதவீதமாக பதிவாகியதில் இருந்துதான் தொற்று பாதிப்பு 78 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.



இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை