Skip to main content

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 64 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

Feb 03, 2022 73 views Posted By : YarlSri TV
Image

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 64 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு 

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சக்ரானின் பயிற்சி முகாமில் பயிற்சிபெற்ற மற்றும் அவருடன் தொடர்பைப் பேணிவந்த 60 பேரையும் எதிர்வரும் 15ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் காணொளி மூலமாக இன்று(02) உத்தரவிட்டுள்ளார்.



கடந்த 21.4.2019 உயிர்த்த ஞாயிறன்று இடம் பெற்ற தாக்குதலின் பின்னர் சக்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரேலியா போன்ற இடங்களுக்குப் பயிற்சிக்காகச் சென்றார்கள் என்ற சந்தேகத்தின் காத்தான்குடியை சேர்ந்த 65 பேரைக் கைது செய்தனர்.



அதேவேளை சக்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர், உட்பட 4 பேரை மட்டக்களப்பு பொலிஸார் கைது செய்தனர் இரு வெவ்வேறு வழக்குகளைக் கொண்ட 69 பேர் பேர் தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர்.



இவர்களில் 5 பேர் வழக்கிலிருந்து விடுவித்து விடுவிக்கப்பட்டதையடுத்து 64 பேர் தொடர்ந்து பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் குறித்த வெவ்வேறு இரு வழக்குகளைக் கொண்ட 64 பேரும் நாட்டிலுள்ள பொலன்னறுவை, அனுதாரபுரம், கேகாலை, திருகோணமலை, போன்ற சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.



இந்த நிலையில் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் முன்னிலையில் இந்த வழக்குகள் வழுக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது தற்போது தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் காரணமாக நீதிமன்றிற்கு இவர்களை அழைத்துவர முடியாததையடுத்து அவர்களைக் காணொளி மூலமாக எதிர்வரும் 15 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் உத்தரவிட்டார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை