Skip to main content

போடியில் மறு வாக்குப்பதிவு …தங்க தமிழ்ச்செல்வனின் பகீர் தகவல்!

Apr 17, 2021 142 views Posted By : YarlSri TV
Image

போடியில் மறு வாக்குப்பதிவு …தங்க தமிழ்ச்செல்வனின் பகீர் தகவல்! 

சட்டமன்ற தேர்தல் கடந்த 6 ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் இரவு 7 மணிவரை தேர்தல் நடைபெற்றது. இதில் பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு உள்ளிட்ட பல பிரச்சினைகள் நடந்தாலும் பெரியளவில் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை.



இந்த சூழலில் தங்க தமிழ்செல்வன் தேனி ஆட்சியர் கிருஷ்ணனுண்ணியைச் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வமும், திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வனும் போட்டியிட்டனர். இதற்கான முடிவு வரும் மே 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது.



இந்நிலையில் தேனி ஆட்சியரை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்செல்வன், “வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் 13 நிமிடங்கள் மின்சாரம் இல்லை. இதனால் சிசிடிவி கேமிராக்கள் இயங்கவில்லை. அத்துடன் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதனால் பலர் கல்லூரி வளாகத்திற்குள் வருகிறார்கள். அதனால் ஸ்ட்ராங் ரூம் பக்கம் யாரும் வராமல் பார்த்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும், கல்லூரி பின்பகுதியில் லைட் இல்லை இதுகுறித்து முறையிட்டேன். உரிய முறையில் நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் தெரிவித்தார். அவரின் வார்த்தையை ஏற்றுக்கொண்டேன்” என்றார்.



தொடர்ந்து பேசிய அவர், “எந்தெந்த வாக்குச் சாவடியில், எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளது என்ற 17C பட்டியல் கொடுக்கப்படும். அதையும் நாங்கள் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பட்டியலையும் ஒப்பிட்டு பார்த்த போது போடி தொகுதியின் பூத் நம்பர் 17 A, 197, 280 ஆகிய மூன்று பூத்தில் பதிவான வாக்குகளில் 300 வாக்குகள் வித்தியாசம் உள்ளது. இதுகுறித்து ஆட்சியரிடம் கேள்வி எழுப்பியபோது, தாமதமாக கணக்கிட்டபோது தவறு நடந்திருக்கலாம். சரிபார்த்துவிட்டு சொல்கிறேன்” என்றார். ஒருவேளை இந்த விவகாரத்தில் தவறு நடந்திருந்தால் 3 பூத்களுக்கும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும்” என்றார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை