Skip to main content

தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு; நாளை அதிகாலை 4.00 மணிக்கு தளர்த்தப்படும்!

Jun 20, 2021 129 views Posted By : YarlSri TV
Image

தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு; நாளை அதிகாலை 4.00 மணிக்கு தளர்த்தப்படும்! 

தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு; நாளை அதிகாலை 4.00 மணிக்கு தளர்த்தப்படும்.



இருப்பினும் மீண்டும் எதிர்வரும் 23ஆம் திகதி இரவு 10.00 மணிக்கு இந்த பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படும். இந்த கட்டுப்பாடு எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 4.00 மணி வரை தொடரும்



பயணக்கட்டுப்பாடு நாளை தளர்த்தப்பட்ட பின்னர் பொது மக்கள் செயல்படவேண்டிய முறை தொடர்பான வழிகாட்டி ஆலோசனைகளை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ளார்.



இது நாளை முதல் ஜூலை 5ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

வீட்டில் இருந்து இருவருக்கு மாத்திரமே வெளியே செல்ல முடியும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



மேல் மாகாணத்தின் மீது விசேட கவனம் செலுத்தி இந்த வழிகாட்டல்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் 50 சதவீத அளவில் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படும். அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் ஊழியர்களுக்காக மாத்திரம் பொதுப்போக்குவரத்து அனுமதிக்கப்படும்.

கடமைக்காக அத்தியாவசிய பணியாளர்களை மாத்திரம் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் தலைவர்கள் அழைக்க முடியும்.



பொருளாதார மத்திய நிலையங்கள் மொத்த விற்பனைக்காக மாத்திரம் திறக்கப்பட வேண்டும. பேக்கரிகளை திறக்க முடியும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விற்பனை நிலையங்களை மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய இடங்களில் திறக்க முடியும். திருமண நிகழ்வுகளுக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது



எனினும், திருமண பதிவு நிகழ்வுக்கு மணமுடிக்கும் தம்பதி உட்பட 10 பேர் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும்.

இறுதிக்கிரிகை நிகழ்வில் 15 பேர் மாத்திரமே பங்கேற்க முடியும்.



சடலம் வழங்கப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் இறுதிக்கிரியைகள் நிறைவு செய்யப்பட வேண்டும். அதேபோல் ஹோட்டல்கள், விடுதிகள் இரவு களியாட்ட விடுதிகள், சாராயக் கடைகள் என்பன மூடப்பட்டிருக்க வேண்டும். பொதுமக்கள் ஒன்று கூடுவதற்கும் அனுமதி அளிக்கப்பட மாட்டாது என சுகாதார அமைச்சு அதில் தெரிவித்துள்ளது.



இதேவேளை மேல் மாகாணத்தில் கடைகள் மூடப்பட வேண்டும். மோட்டார் வாகனங்களை நிறுத்தும் இடங்கள், டயர் சேவை நிலையங்கள் போன்ற இடங்களில் மக்கள் ஒன்று கூடாத வகையில் திறக்க முடியும்.



சிகை அழங்கார நிலையங்கள் மற்றும் அழகுக் கலை நிலையங்களும் திறக்கப்பட்டிருக்கும். ஒரு தடவையில் ஒருவருக்கு மாத்திரமே சேவையை வழங்க முடியும். மேல் மாகாணத்தில் ஆடை விற்பனை நிலையங்கள் மூடப்பட்டு இருக்க வேண்டும். சிறுவர் மற்றும் வயோதிபர் இல்லங்கள், சிறைச்சாலைகள் என்பவற்றிற்கு அதிதிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.



உடற்பயிற்சி நிலையங்கள், உள்ளக விளையாட்டு அரங்குகள், நீச்சல் தடாகங்கள் என்பன மூடப்பட்டிருக்கும். மேல் மாகாணத்தில் நடைபாதை விற்பனையில் ஈடுபட முடியாது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

4 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

4 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

4 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

4 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

4 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை