Skip to main content

தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தாராபுரத்திற்கு பிரதமர் மோடி நாளை வருகை!

Mar 29, 2021 165 views Posted By : YarlSri TV
Image

தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தாராபுரத்திற்கு பிரதமர் மோடி நாளை வருகை! 

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் தமிழக பா.ஜனதா தலைவா் எல்.முருகன் வேட்பாளராக போட்டியிடுகிறாா். அவரை ஆதாித்து பிரதமா் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் பிரமாண்ட தோ்தல் பிரசார பொதுக்கூட்டம் தாராபுரத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. அதற்கான பிரமாண்ட மேடை, பாா்வையாளா்கள் அரங்கம் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அதனை பாா்வையிட பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளரும், பா.ஜனதா தமிழக மேலிட பொறுப்பாளருமான சி.டி.ரவி நேற்று தாராபுரம் வந்தார். பின்னர் பொதுக்கூட்டம் நடைபெறும் மேடையை பார்வையிட்ட அவர் நிருபர்களிடம் கூறியதாவது



தாராபுரத்தில் 30-ந்தேதி (நாளை) காலை 11.30 மணிக்கு பிரதமா் மோடி கலந்து கொள்ளும் பிரமாண்ட தோ்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அதில் தமிழக முதல்-அமைச்சா் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சா் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவா்கள் கலந்து கொள்ள உள்ளனா். கூட்டத்தில் தாராபுரம் சட்டமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளா் எல்.முருகன் உள்பட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் 13 வேட்பாளா்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றனா். இதில் கலந்து கொள்ள ஒரு லட்சத்துக்கும் அதிகமான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினா் திரண்டு வரவுள்ளனா்.



மத்தியில் பிரதமா் நரேந்திரமோடி சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறாா். அதுபோன்று தமிழகத்தில் முதல்-அமைச்சா் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சா் ஓ.பன்னீா் செல்வம் ஆகியோா் நல்லதொரு ஆட்சியை நடத்தி வருகின்றனா். தமிழகத்துக்கு பல்வேறு திட்டங்களுக்காக மத்திய அரசு 6 லட்சத்து 10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி உள்ளது. அதுபோன்று தமிழக அரசும் விவசாய கடன் தள்ளுபடி, பொங்கல் பாிசு ரூ.2 ஆயிரத்து 500 என பல்வேறு நல்ல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி உள்ளது. இந்த சிறப்பான ஆட்சி தொடர வேண்டும் என மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.



தாராபுரம் தொகுதியில் மக்களின் ஆதரவு 100 சதவீதம் எங்களுக்கு உள்ளது. அதுபோன்று தமிழ்நாட்டில்பிற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு 95 சதவீத வெற்றி வாய்ப்புஉள்ளது. ஏனென்றால் மக்கள் அராஜக தி.மு.க. ஆட்சிக்கு வரக்கூடாது என்று முடிவு செய்துவிட்டாா்கள். அவா்கள் ஆட்சியில் கட்டபஞ்சாயத்து, நில அபகாிப்பு, பெண்களுக்கு பாதுகாப்பு இன்மை இப்படி பல்வேறு பிரச்சினைகள் இருந்தது. அவா்கள் மக்களுக்கு 11 முதல் 14 மணி நேர மின்தடையை கொடுத்தாா்கள். அதனால் மக்கள் அவா்களுக்கு நிரந்தர தடைகொடுத்துவிட்டாா்கள். இப்போது மக்கள் அனைத்து வசதிகளும் பெற்று கட்டபஞ்சாயத்து, நிலஅபகாிப்பு இன்றி நிம்மதியாக இருக்கிறாா்கள். எனவே தற்போது தமிழக மக்களுக்கு அ.தி.மு.க. நண்பன், தி.மு.க எதிாி. அதுபோன்று பா.ஜனதாவும் சாி, அ.தி.மு.க. வும் சாி எங்களிடம் குடும்ப அரசியல் கிடையாது, மக்களுக்கான அரசியல் மட்டுமே உள்ளது. எனவே இந்த தோ்தலிலும் மக்கள் எங்களை வெற்றிபெற செய்வாா்கள்.



இவ்வாறு அவர் கூறினார்.



பேட்டியின் போது பா.ஜனதா கட்சியின் கா்நாடக உள்துறை இணை மந்திரி பசுவராஜா, அ.தி.மு.க. மாவட்ட அவைத்தலைவா் பி.கே.ராஜ், பா.ஜனதா வடக்கு மாவட்ட தலைவா் செந்தில்வேல், ஈரோடுவடக்கு மாவட்ட பொறுப்பாளா் செல்வகுமாா், மாவட்ட பொருளாளர் கொங்கு ரமேஷ், அ.தி.மு.க.மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிாிவு செயலாளா் ஆத்திக் உள்பட பலா் உடன் இருந்தனா்.



 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

4 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

4 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

4 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

4 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

4 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை