Skip to main content

ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை விளக்கமற்றது - ரணில் விக்கிரமசிங்க

Mar 09, 2021 204 views Posted By : YarlSri TV
Image

ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை விளக்கமற்றது - ரணில் விக்கிரமசிங்க 

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை விளக்கமற்றது என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதேநேரம் பிரதான குற்றவாளிகள் யார் என்ற உண்மைகளை ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவிக்கத் தவறியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விசாரணை அறிக்கை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள தனது நிலைப்பாட்டிலேயே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.



இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-



“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் யார்? அவருடன் நேரடியாகத் தொடர்புபட்ட நபர்கள் யார்? ஐ.எஸ். அமைப்புடன் எவ்வாறு இவர்கள் தொடர்புகளை ஏற்படுத்தினர்? இந்தத் தாக்குதலின் பின்னணி என்ன? போன்ற விடயங்கள் ஆணைக்குழு அறிக்கை மூலம் வெளிவரும் என்று நான் நினைத்திருந்தேன். ஆனால், அந்த விசாரணை அறிக்கையில் அவ்வாறான தகவல்கள் எதுவும் இல்லை.



சம்பவத்துக்கு முன்னரே கிடைத்ததாகக் கூறப்படும் இந்தியப் புலனாய்வுத் தகவலை எனக்கு அறிவித்திருந்தால் எந்த வழியிலேனும் தாக்குதலைத் தடுத்திருப்பேன்.



ஜனாதிபதி நாட்டில் இல்லாத நேரத்தில் நான் அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு செயற்பட்டதனாலேயே தாக்குதல் நடத்தப்பட்டு ஒன்பது மணித்தியாலங்களுக்குள் தாக்குதலுடன் தொடர்புபட்ட சகலரையும் கைதுசெய்யவும், நிலைமைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் முடிந்தது.



இவ்வாறு துரிதமாகச் செயற்பட்டமை குறித்து வெளிநாடுகள் கூட ஆச்சரியப்பட்டன” – என்றார்.


Categories: இலங்கை
Image

சில சுவாரஸ்யமான செய்திகள்

தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை