Skip to main content

இரணைதீவில் அடக்கம் செய்வதற்கான தீர்மானத்தை அரசு கைவிடவேண்டும் யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்!

Mar 07, 2021 182 views Posted By : YarlSri TV
Image

இரணைதீவில் அடக்கம் செய்வதற்கான தீர்மானத்தை அரசு கைவிடவேண்டும் யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்! 

கொவிட்-19 நோயால் உயிரிழந்தவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கான தீர்மானத்தை அரசு கைவிடவேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று கவனயீர்ப்பு   நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.



யாழ்ப்பாணம் மரியன்னை பேராலயத்தில் இன்று காலை 6.30 மணிக்கு இந்த கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.

“கத்தோலிக்க மக்கள் வாழும் இரணைதீவில் கொவிட் -19 நோயால் உயிரிழந்தோரின் சடங்களை அடக்கம் செய்ய அரசு எடுத்த தீர்மானத்தை கைவிடவேண்டும். எமது எதிர்ப்பு முஸ்லிம் மக்களுக்கானது அல்ல. இஸ்லாமியரும் கத்தோலிக்கர்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றோம்.



மக்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்கவேண்டும்” என்று யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர் வலியுறுத்தினார்.



எம் வாழ்விடத்தை சவக்காலை ஆக்காதே!, இரணைதீவு மக்களின் நல்வாழ்வை சிதைக்காதே!, மத நல்லிணக்கத்தை சிதைக்காதே! போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஏந்தியிருந்தனர்.

இதேபோன்று அனைத்து கத்தோலிக்க ஆலயங்களிலும் வெவ்வேறு நேரங்களில் இவ்வாறான கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை