Skip to main content

தடுப்பூசி போட்டதால் எந்த பாதிப்பும் இல்லை - இங்கிலாந்து அரசி எலிசபெத் சொல்கிறார்

Feb 27, 2021 173 views Posted By : YarlSri TV
Image

தடுப்பூசி போட்டதால் எந்த பாதிப்பும் இல்லை - இங்கிலாந்து அரசி எலிசபெத் சொல்கிறார் 

இங்கிலாந்து நாட்டின் அரசி இரண்டாம் எலிசபெத் தனது கணவர் 94 வயதான இளவரசர் பிலிப்புடன் சென்று கடந்த ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.



இவரது மூத்த மகனும் வாரிசுமான இளவரசர் சார்லஸ், அவரது மனைவி கமிலா ஆகியோரும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். தற்போது இங்கிலாந்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.



தடுப்பூசி போட்டுக் கொண்டது குறித்து இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபெத் கூறியதாவது:-



கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டேன். அதனால் எனக்கு சிறிய பிரச்சினை கூட ஏற்படவில்லை. தடுப்பூசி போடுவது குறித்து தயக்கம் கொள்பவர்கள் இதுபற்றி சிந்திக்க வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்வது மிகவும் எளிது என்று அதைப் போட்டுக் கொண்டவர்களிடம் இருந்து ஏராளமான கடிதங்கள் வந்துள்ளன.



தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் நிச்சயம் பாதுகாப்பு பெறுவார்கள். தடுப்பூசி போடவில்லை என்றால் அந்த பாதுகாப்பை பெற முடியாது.



எனவே மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டியது அவசியம். தடுப்பூசி போட்டுக் கொண்டால் பாதுகாக்கப்பட்ட உணர்வு ஏற்படும். தடுப்பூசி போடும் திட்டத்தை நான் முழுமையாக வரவேற்கிறேன்.



இவ்வாறு அவர் கூறினார்.



இங்கிலாந்து மன்னர் பிலிப்பும் தடுப்பூசி போடுவதன் அவசியத்தை தெரிவித்துள்ளார். “இது ஒரு சிறப்பான பணி” என்று சுகாதாரத்துறை தலைவரிடம் கூறினார். “இது ஒரு ஊக்கமளிக்கும் செயல். இரண்டாம் உலகப்போரின் போது ஏராளமானோர் உயிரிழந்தார்கள். அதுபோல் கொரோனா தாக்குதல் நடந்துள்ளது.



அதை வெல்ல தடுப்பூசி அவசியம். இதற்கு அனைவரும் ஆதரவு தெரிரிவிக்க வேண்டும்“ என்று கூறியுள்ளார். தற்போது 94 வயதான இங்கிலாந்து அரசர் பிலிப் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். என்றாலும் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை