Skip to main content

இலங்கைக்கு 50 மில்லியன் டாலர் (சுமார் ரூ.360 கோடி) கடனுதவி வழங்கப்போவதாக இம்ரான்கான் அறிவித்தார்!

Feb 26, 2021 214 views Posted By : YarlSri TV
Image

இலங்கைக்கு 50 மில்லியன் டாலர் (சுமார் ரூ.360 கோடி) கடனுதவி வழங்கப்போவதாக இம்ரான்கான் அறிவித்தார்! 

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், 2 நாள் பயணமாக இலங்கை சென்றிருந்தார். அங்கு அவர் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேசினார்.



குறிப்பாக பாதுகாப்பு, பயங்கரவாதம், ஒருங்கிணைக்கப்பட்ட குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் உளவுத்தகவல் பரிமாற்றம் போன்ற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் உதவி குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.



இந்த பயணத்தையொட்டி, இலங்கைக்கு 50 மில்லியன் டாலர் (சுமார் ரூ.360 கோடி) கடனுதவி வழங்கப்போவதாக இ்ம்ரான்கான் அறிவித்தார். மேலும் இலங்கையில் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்காக ரூ.5.20 கோடி நிதியுதவியும் அறிவித்தார்.



இம்ரான்கான் பயணம் தொடர்பாக இருநாடுகளும் இணைந்து நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில் இந்த தகவல்கள் வெளியாகி இருந்தது.



மிகப்பெரிய நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் பாகிஸ்தான், சமீபத்திய கொரோனா ஊரடங்கால் மேலும் பெரும் பொருளாதார சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையிலும் அந்த நாடு இலங்கைக்கு கோடிக்கணக்கான பண உதவி அறிவித்திருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை