Skip to main content

கொவிட்-19 தொற்றுநோயின் தோற்றம் குறித்த விசாரணைக்கு சீனா முழு ஒத்துழைப்பு!

Feb 05, 2021 195 views Posted By : YarlSri TV
Image

கொவிட்-19 தொற்றுநோயின் தோற்றம் குறித்த விசாரணைக்கு சீனா முழு ஒத்துழைப்பு! 

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோயின் தோற்றம் குறித்த விசாரணைக்கு, சீனாவின் உயிரியில் விஞ்ஞானிகள் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உலக சுகாதார அமைப்பின் விஷேடக்குழு தெரிவித்துள்ளது.



இதுகுறித்து நிபுணர் குழுவின் தலைவர் பீட்டர் டஸாக் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘வூஹான் தீநுண்மி ஆயவகத்தின் துணை இயக்குநர் ஷி ஜெங்லி உள்ளிட்ட அந்த ஆய்வகத்தின் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் உயிரியில் விஞ்ஞானிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



அதில், எங்கள் குழு எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் ஷி ஜெங்லி உள்ளிட்ட விஞ்ஞானிகள் வெளிப்படையாக பதிலளித்து ஒத்துழைப்பு அளித்தனர்’ என்று பதிவிட்டுள்ளார்.



ஆரம்பகால தொற்றுடன் தொடர்புடைய ஆராய்ச்சி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் கடல் உணவு சந்தையைச் சேர்ந்தவர்களை நேர்காணல் செய்ய 10 விஞ்ஞானிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.



கொவிட்-19 முதன்முதலில் மத்திய சீனாவின் வுஹானில் 2019ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கண்டறியப்பட்டது.



முதல் தொற்று கண்டுபிடிக்கப்பட்ட இடம் வுஹான் என்றாலும், வைரஸ் தோன்றிய இடம் அவசியமில்லை என்று சீனா பல மாதங்களாக கூறி வருகிறமை குறிப்பிடத்தக்கது.



 



 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை