Skip to main content

பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய சட்டமூலம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது!

Feb 17, 2021 187 views Posted By : YarlSri TV
Image

பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய சட்டமூலம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது! 

இதற்கமைய இனி வெறுப்பூட்டும் விதமாக பேசுவோரை தடை செய்யவும், இஸ்லாமிய பாடசாலைகளை மூடுவதற்கும் பொலிஸாருக்கு அதிகாரம் அளிக்கப்படவுள்ளது.



நேற்று பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் கீழவையில் முன்வைக்கப்பட்ட குறித்த சட்டமூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த சட்டத்தை ஆதரித்து 347 பேரும் எதிர்த்து 151 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்தனர். இனி, குறித்த சட்டமூலம் மேலவையில் வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது.



பிரான்சில் இஸ்லாமியர்கள் பெருமளவில் வசித்தாலும், அவர்கள் மற்றவர்களுடன் இணைந்து வாழ்கிறார்களா என்பது குறித்த விவகாரம் பல ஆண்டுகளாக பிரிவினையை ஏற்படுத்திவந்துள்ளது.



 அண்மைக் காலமாக இஸ்லாமிய தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ள சூழலில், அடுத்த ஆண்டு பிரான்சில் ஜனாதிபதி தேர்தலும் நடைபெறவுள்ள நிலையில், இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை