Skip to main content

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சென்னை மெட்ரோ ரெயில் கட்டணத்தை குறைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்!

Feb 20, 2021 185 views Posted By : YarlSri TV
Image

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சென்னை மெட்ரோ ரெயில் கட்டணத்தை குறைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்! 

சென்னையில் நாளை மறுநாள் முதல் மெட்ரோ ரெயில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சென்னை மெட்ரோ ரெயிலில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.



* மெட்ரோ ரெயிலில் அதிகபட்ச கட்டணமான 70 ரூபாயை ரூ.50 ஆக குறைக்கப்பட்டுள்ளது.



* 5-12 கி.மீ. வரையிலான கட்டணமான 40 ரூபாயை ரூ.30 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

 



* 2-5 கி.மீ. வரை கட்டணம் ரூ.20, 0-2 கி.மீ. வரையிலான கட்டணத்தில் மாற்றமில்லை.



 



* ஞாயிற்றுக்கிழமை, பொது விடுமுறை நாட்களில் 50 சதவீத கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.





* க்யூ ஆர் கோடு, தொடுதல் இல்லா மதிப்பு கூட்டு பயண அட்டை மூலம் பயணித்தால் 20 சதவீத கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.



* வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் வழித்தடத்திற்கும் சேர்த்து இனி 54 கி.மீ. 100 ரூபாயே வசூலிக்கப்படும். ஏற்கனவே வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் வழித்தடம் தவிர்த்து 45 கி.மீ.க்கு ரூ.100 வசூலிக்கப்பட்டு வந்தது.



இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை