Skip to main content

6கட்ட அகழாய்வு பணிகள் முடிந்த நிலையில் கீழடியில் 7ஆம் கட்ட அகழாய்வு பணி இன்றுமுதல்!

Feb 13, 2021 228 views Posted By : YarlSri TV
Image

6கட்ட அகழாய்வு பணிகள் முடிந்த நிலையில் கீழடியில் 7ஆம் கட்ட அகழாய்வு பணி இன்றுமுதல்! 

6கட்ட அகழாய்வு பணிகள் முடிந்த நிலையில் கீழடியில் 7ஆம் கட்ட அகழாய்வு பணி இன்றுமுதல் !



சிவகங்கை மாவட்டம், கீழடியில் தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டு வரும் நிலையில் 2,600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் பொருட்கள், மனித எலும்பு கூடு, முதுமக்கள் தாழி, விலங்கு எலும்பு கூடு, தங்க நாணயங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் கண்டறியப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் 7 இடங்களில் இந்தாண்டு அகழாய்வு நடைபெறவுள்ளது. கீழடி, அதிச்சநல்லூர் , சிவகளை, கொற்கை, கொடுமணல், மயிலாடுதுறை, கங்கைகொண்ட சோழபுரம் உள்ளிட்ட 7 இடங்களில் அகழாய்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



கீழடி 7ஆம் கட்ட அகழாய்வை சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் இன்று முதல்வர் பழனிசாமி தொடக்கி வைத்தார். தமிழக தொல்லியல்துறை சார்பில் 6கட்ட அகழாய்வு பணிகள் முடிந்த நிலையில் 7 ஆம் கட்ட அகழாய்வு இன்று தொடங்கப்பட்டுள்ளது. கீழடி மணலூர், கொந்தகை, அகரம் ஆகிய இடங்களில் 7 ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெறவுள்ளன.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை