Skip to main content

தஞ்சையில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1035வது சதய விழா 26 ஆம் தேதி மட்டும் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்!

Oct 22, 2020 289 views Posted By : YarlSri TV
Image

தஞ்சையில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1035வது சதய விழா 26 ஆம் தேதி மட்டும் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்! 

வழக்கமாக இரண்டு நாட்களுக்கு நடத்தப்படும் சதயவிழா கொரோனா காரணமாக ஒருநாள் மட்டுமே நடத்தப்படுகிறது. ராஜராஜன் சிலைக்கு மாலை அணிவித்தல். பெருவுடையாருக்கு அபிஷேகம். இரவு சுவாமி வீதிஉலா நடக்கிறது. அதே சமயம் பட்டிமன்றம், பாட்டுமன்றம், கலை நிகழ்ச்சிகள், ராஜராஜன் விருது வழங்கும் நிகழ்வு உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 10 வயதுக்கு உட்பட்டவர்கள் சதய விழாவில் பங்கேற்க அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.



மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த ஐப்பசி சதய நட்சத்திர நாளில் அரசால் ராஜராஜ சோழன் சதய விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவில் ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பர். அத்துடன் பிரம்மாண்ட கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும். இதனால் தஞ்சை மாவட்டமே விழா கோலம் பூண்டிருக்கும் . ஆனால் இந்தாண்டு கொரோனா காரணமாக இந்த விழா களையிழந்து காணப்படும் என தஞ்சை வாசிகள் கவலை தெரிவித்துள்ளனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை