Skip to main content

இந்த ஆண்டுக்கான ரஞ்சி கிரிக்கெட் போட்டி இரத்து

Feb 02, 2021 193 views Posted By : YarlSri TV
Image

இந்த ஆண்டுக்கான ரஞ்சி கிரிக்கெட் போட்டி இரத்து 

கொரோனா அச்சுறுத்தலால் முதல்முறையாக இந்த ஆண்டுக்கான ரஞ்சி கிரிக்கெட் போட்டி இரத்து செய்யப்பட்டுள்ளது.



இந்தியாவில் ரஞ்சி கிண்ண கிரிக்கெட் போட்டி 1934-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. கடந்த பருவத்தில் அரங்கேறிய ரஞ்சி போட்டியில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்றன. இதில் சவுராஷ்டிரா அணி சம்பியன் கிண்ணத்தை முதல்முறையாக சுவீகரித்தது. உள்நாட்டு வீரர்களின் திறமையை மேம்படுத்த உதவும் இந்த முதல்தர கிரிக்கெட் போட்டி (நான்குநாள் ஆட்டம்) முதல்முறையாக இந்த பருவத்தில் (2020-/21) நடத்துவதில் சிக்கல் உருவானது.



கொரோனா பரவல் இன்னும் முழுமையாக கட்டுக்குள் வராத நிலையில் ஒவ்வொரு மாநில அணி வீரர்களையும் கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து முழுமையான பாதுகாப்புடன் நீண்ட நாட்கள் இந்த போட்டியை நடத்துவது என்பது சிரமமான காரியம். அத்துடன் ஏற்கனவே சில மாதங்கள் கடந்து விட்டது.



இது குறித்து ஒவ்வொரு மாநில கிரிக்கெட் சங்கங்களிடம் இந்திய கிரிக்கெட் சபை யோசனை கேட்டது. இதில் பெரும்பாலான மாநில சங்க உறுப்பினர்கள் இந்த சீசனில் ரஞ்சி போட்டி வேண்டாம் என்று கருத்து தெரிவித்தனர்.



அவர்களின் யோசனையை ஏற்று 87 ஆண்டு கால வரலாற்றில் முதல்முறையாக இந்த பருவத்தில் ரஞ்சி போட்டி நடத்தப்படாது என்று இந்திய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய கிரிக்கெட்சபையின் செயலாளர் ஜெய் ஷா, மாநில கிரிக்கெட் சங்கங்களின் நிர்வாகிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ‘ரஞ்சி கிண்ண போட்டியை இந்த ஆண்டு நடத்த வேண்டாம் என்று மாநில கிரிக்கெட் சங்கங்களிடம் நடத்தப்பட்ட ஆலோசனைக்கு பிறகு முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை