Skip to main content

பிக் பாஷ் லீக் – சிட்னி தண்டரை வீழ்த்தி சேலஞ்சர் சுற்றுக்கு முன்னேறியது பிரிஸ்பேன் ஹீட்

Feb 01, 2021 188 views Posted By : YarlSri TV
Image

பிக் பாஷ் லீக் – சிட்னி தண்டரை வீழ்த்தி சேலஞ்சர் சுற்றுக்கு முன்னேறியது பிரிஸ்பேன் ஹீட் 

         



கான்பெராவில்(Canberra) நடந்த பிக் பாஷ் லீக் (Big Bash League) போட்டியில் சிட்னி தண்டர் (Sydney Thunder) அணியை வீழ்த்தி பிரிஸ்பேன் ஹீட் (Brisbane Heat )அணி சேலஞ்சர் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.



பிக் பாஷ் லீக் போட்டியின்  நொக் அவுட் சுற்று கான்பெரா மைதானத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது.



இதில் சிட்னி தண்டர், பிரிஸ்பேன் ஹீட் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பிரிஸ்பேன் ஹீட் அணி முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தது.



                                                                                                                                                 இதையடுத்து சிட்னி தண்டர் அணி களமிறங்கியது. அந்த அணியின் பில்லிங்ஸ், கட்டிங் ஆகியோர் தலா 34ஓட்டங்களுடனும், தொடக்க ஆட்டக்காரார் கவாஜா 28ஓட்டங்களுடனும், பெர்குசன் 25 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.



இறுதியில், சிட்னி தண்டர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 158 ஓட்டங்களை எடுத்தது.



இதையடுத்து 159ஓட்டங்களை  எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பிரிஸ்பேன் ஹீட் ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்கள்



ஜோ டென்லி டக் அவுட்டாகி ஏமாற்றினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் லின் 10 ஓட்டங்களில் வெளியேறினார். அடுத்து இறங்கிய லாபஸ்சாக்னே 32 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.



தொடர்ந்து இறங்கிய சாம் ஹீஸ்லெட்டும் ஜிம்மி பியர்சன் அதிரடியாக ஆடினர். ஹீஸ்லெட் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து அதிரடி காட்டினார்.



இறுதியில், பிரிஸ்பேன் ஹீட் அணி 19.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 162 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது. அத்துடன் சேலஞ்சர் சுற்றுக்கும் முன்னேறியது. ஹீஸ்லெட் 74 ஓட்டங்களுடனும், பியர்சன் 43 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.



பிக் பாஷ் லீக் போட்டியின் சேலஞ்சர் போட்டி பிப்ரவரி 4ஆம் திகதி நடைபெறுகிறது. அதில் பெர்த் ஸ்கார்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது பிரிஸ்பேன் ஹீட் அணி. இதில் வெற்றி பெறும் அணி பெப்ரவரி 6ஆம் திகதி  நடக்கவுள்ள இறுதிப்போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் அணியை சந்திக்கிறது.


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

1 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

1 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

1 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை