Skip to main content

அமெரிக்காவில் அமைதியான முறையில் ஆட்சி மாற்றம் நிகழ வேண்டும் – மோடி!

Jan 07, 2021 259 views Posted By : YarlSri TV
Image

அமெரிக்காவில் அமைதியான முறையில் ஆட்சி மாற்றம் நிகழ வேண்டும் – மோடி! 

அமெரிக்காவில் ஒழுங்கான, அமைதியான முறையில் ஆட்சி மாற்றம் நிகழ வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.



அமெரிக்க நாடாளுமன்ற கட்டட முற்றுகைக்கு உலக நாடுகள் பல கண்டனம் வெளியிட்டு வருகின்ற நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மேற்படி குறிப்பிட்டுள்ளர்.



இது குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ”அமெரிக்க நாடாளுமன்ற கட்டட முற்றுகை மற்றும் வன்முறை கண்டனத்திற்குரியது. சட்டவிரோத ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஜனநாயக வழிமுறையைத் தகர்த்தெறிய அனுமதிக்க முடியாது. ஒழுங்கான மற்றும் அமைதியான முறையில் அதிகார மாற்றம் நடைபெற வேண்டும்”  என வலியுறுத்தியுள்ளார்.



அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்ற நிலையில் வருகிற ஜனவரி 20 ஆம் திகதி அவர் பதவியேற்கவுள்ளார்.



இந்நிலையில், அதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்ற நிலையில், நாடாளுமன்ற கட்டடத்தை ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர்.



இதைத்தொடர்ந்து நடைபெற்ற வன்முறை மற்றும் கலவரத்தில் பெண் உள்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பொலிஸ் அதிகாரிகள் உள்பட பலர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

10 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை