Skip to main content

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியே 77 லட்சத்தை கடந்துள்ளது!

Jan 17, 2021 201 views Posted By : YarlSri TV
Image

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியே 77 லட்சத்தை கடந்துள்ளது! 

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 218 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.



இந்த வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பல நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டபோதும் கொரோனா வைரஸ் உருமாறி மீண்டும் வேகமாக பரவத்தொடங்கியுள்ளது.



இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியே 77 லட்சத்தை கடந்துள்ளது. 



குறிப்பாக இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் 16 ஆயிரத்து 977 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 



தற்போதைய நிலவரப்படி, 9 கோடியே 49 லட்சத்து 21 ஆயிரத்து 985 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  



வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 51 லட்சத்து 34 ஆயிரத்து 404 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 601 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.



கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 20 லட்சத்து 29 ஆயிரத்து 632 பேர் உயிரிழந்துள்ளனர்.



ஆனாலும், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 6 கோடியே 77 லட்சத்து 57 ஆயிரத்து 949 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.



கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-



அமெரிக்கா - 1,43,43,612



இந்தியா - 1,01,79,715



பிரேசில் - 73,88,784



ரஷியா - 29,36,991



துருக்கி - 22,54,052


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை