Skip to main content

முல்லை கடற்கரையை அண்மித்து தொழிலில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகள்!

Dec 10, 2020 244 views Posted By : YarlSri TV
Image

முல்லை கடற்கரையை அண்மித்து தொழிலில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகள்! 

முல்லைத்தீவு – கடற்கரையினை அண்மித்த பகுதியில் இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகள் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தன.



குறிப்பாக கடற்கரையில் இருந்து சுமர் 2 கிலோமீற்றர் தூரத்திற்குள், அத்துமீறி நுழைந்து அவர்கள் கடற்றொழில் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தமையினை அவதானிக்கக் கூடியதாகவிருந்ததாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.



இதுதொடர்பில் முல்லைத்தீவு மீனவர்கள் கடற்படையினருக்குத் தெரியப்படுத்திய போதும், கொரோனா அச்சம் காரணமாக இந்தியன் இழுவைப் படகுகளுக்கு அருகே செல்லமுடியாதென கடற்படையினர் மறுப்புத்தெரிவித்துள்ளதுடன், மீனவர்களையும் இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகளுக்கு அருகே செல்லக்கூடாது என உத்தரவிட்டுள்ளனர்.



இதுகுறித்து முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சமாசத்தலைவர் கருத்து வெளியிடும் போது, “இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகள் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக எமது கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டுவருகின்றனர்.



இந்திய இழுவைப்படகுகள், இழுவை மடிகளைப் பயன்படுத்தி தமது கடற்றொழில் செயற்பாடுகளை முன்னெடுப்பதால் முல்லைத்தீவுக் கடல்வளம் பாதிக்கப்படுவதுடன், எமது மீனவர்களின் வாழ்வாதாரமும் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றது.



அத்துடன், இந்திய இழுவைப் படகுகளால் முல்லைத்தீவு மீனவர்களின் வலைகள் சேதப்படுத்தப்பட்டும் வருகின்றது.



இது தொடர்பில் கடற்படையினர், மற்றும் உரிய அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியும், இதுதொடர்பில் எவரும் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்க முன்வருவதில்லை.



இந்த நிலையில் நாளுக்குநாள் இந்திய மீனவர்களின் வருகை அதிகரித்துள்ளதுடன், அவர்கள் தற்போது எமது கடற்கரையினை அண்மித்து வருகைதரும் அளவிற்குத் துணிந்துள்ளனர்.



எனவே இச்செயற்பாட்டினை முடிவுக்குக் கொண்டுவர விரைவில் நாம் போராட்டத்தில் ஈடுபடவும் தீர்மானித்துள்ளோம். இதற்கு அனைத்து மக்களும் ஆதரவு வழங்க வேண்டும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை