Skip to main content

உணவிற்காக கையேந்த வேண்டிய நிலையில் இலங்கையின் சில குடும்பங்கள்- உலக உணவு திட்டம்!

Sep 21, 2022 101 views Posted By : YarlSri TV
Image

உணவிற்காக கையேந்த வேண்டிய நிலையில் இலங்கையின் சில குடும்பங்கள்- உலக உணவு திட்டம்! 

இலங்கையில் உணவுப்பாதுகாப்பின்மை மேலும் மோசமடைகின்றது; சில குடும்பங்கள் வேறு ஒருவரிடமிருந்து உணவை பெற்று வாழவேண்டிய நிலையில் உள்ளன என உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.



இலங்கையில் உணவு பாதுகாப்பு நிலைமை இன்னமும் ஸ்திரமற்றதாகவே காணப்படுகின்றது என உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.



இலங்கையின் சனத்தொகையில் மூன்றில் ஒருவருக்கும் அதிகமானவர்கள் கடும் உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொண்டுள்ளனர் என்பது உலக உணவு திட்டம் ஆகஸ்ட் மாதத்தில் மேற்கொண்ட ஆய்வின் போது தெரியவந்துள்ளது.



இது ஜூன் மாதத்தை விட அதிகமாகும்.



இலங்கையின் சனத்தொகையில் 37 வீதமானவர்கள் கடும் உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொண்டுள்ளனர் என்பது உலக உணவு திட்டத்தின் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.



பத்தில் எட்டு குடும்பங்கள் உணவை கைவிடுதல் வேறு இடத்திலிருந்து உணவை பெற்று உண்ணுதல் ஒரு நாளைக்கு உண்ணும் உணவை குறைத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.



இலங்கையின் உணவு நெருக்கடி சமூகத்தின் பல்வேறு பிரிவுகளில் சமமற்ற தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மோசமான நிலையில் உள்ளன அதேநேரத்தில் மலையகம் மற்றும் நகர்புறங்களில்  கிராமங்களை விட நிலைமை மோசமாக உள்ளது என உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை