Skip to main content

அமெரிக்காவில் ஒன்றரைக் கோடியைக் கடந்த கொரோனா பாதிப்பு!

Dec 07, 2020 311 views Posted By : YarlSri TV
Image

அமெரிக்காவில் ஒன்றரைக் கோடியைக் கடந்த கொரோனா பாதிப்பு! 

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை ஒன்றரைக் கோடியைக் கடந்துள்ளது.



கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.



அங்கு கொரோனாவின் தாக்கம் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 1 கோடியே 51 இலட்சத்து 59 ஆயிரத்து 529 ஆக பதிவாகியுள்ளது.



இதேநேரம், அங்கு கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 இலட்சத்து 88 ஆயிரத்து  906ஆக பதிவாகியுள்ளது.



மேலும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 88 இலட்சத்து 55 ஆயிரத்து 593 ஆக காண்பபுடுகிறது.



இதனையடுத்து சுமார் 60 இலட்சத்துக்கும் அதிகமானோர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை