Skip to main content

கொரோனா வைரஸ் : இந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

Dec 07, 2020 212 views Posted By : YarlSri TV
Image

கொரோனா வைரஸ் : இந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு! 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 32 ஆயிரத்து 272 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.



இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 96  இலட்சத்து 76 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 91 இலட்சத்து 38 ஆயிரத்து 171 பேர் குணமடைந்துள்ளனர். அத்துடன் 3 இலட்சத்து 98 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.



தொற்றாளர்கள் அதிகமாக குணமடையும் நாடுகளின் வரிசையில் இந்தியா முன்னிலை வகிக்கின்றது. மேலும் நேற்று ஒரேநாளில் 374 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 40  ஆயிரத்து 590 ஆக அதிகரித்துள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை