Skip to main content

லெபனான் மத்திய வங்கி இன்னும் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே மானியங்களை வைத்திருக்க முடியும் – ஆளுநர்!

Dec 02, 2020 247 views Posted By : YarlSri TV
Image

லெபனான் மத்திய வங்கி இன்னும் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே மானியங்களை வைத்திருக்க முடியும் – ஆளுநர்! 

நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு மத்தியில் லெபனானின் மத்திய வங்கியால் அடிப்படை மானியங்களை இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே வைத்திருக்க முடியும் என ஆளுநர் ரியாட் சலமே தெரிவித்துள்ளார்.



ஆகவே லெபனான் அரசாங்கம் மேலும் ஒரு திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றும் தடயவியல் தணிக்கைக்கு லெபனான் அரசாங்க கணக்குகளை வழங்க மத்திய வங்கி உறுதியளிக்கும் என்றும் அவர் கூறினார்.



ஆனால் உள்நாட்டு வங்கிகளின் கணக்குகளை வெளியிடுவதில் சட்டத்தில் மாற்றம் தேவைப்படும் என ஆளுநர் ரியாட் சலமே தெரிவித்துள்ளார்.



முக்கிய இறக்குமதிகள் – எரிபொருள், கோதுமை மற்றும் மருந்து – மற்றும் சில அடிப்படை பொருட்களுக்கு வெளிநாட்டு நாணயத்தை வழங்க மத்திய வங்கி குறைந்து வரும் இருப்புக்களைப் பயன்படுத்துகிறது.



இந்நிலையில் மானியங்களுக்கு ஒரு முடிவுக்கு வருவதற்கான பரிந்துரைகள் பீதி மற்றும் பசி அதிகரிக்கும் என்ற அச்சத்தையும் தூண்டியுள்ளது. இந்த நெருக்கடி பாதிக்கும் மேற்பட்ட மக்களை ஏழைகளாக ஆக்கியது.



முக்கிய சீர்திருத்தங்களுக்கிடையில் மத்திய வங்கியின் தடயவியல் தணிக்கையை வெளிநாட்டு நன்கொடையாளர்கள் கோரியுள்ள நிலையில், சில சட்டங்கள் திருத்தப்படாமல் உள்ளூர் வங்கிகளின் கணக்குகளை வெளியிட முடியாது என ஆளுநர் ரியாட் சலமே குறிப்பிட்டுள்ளார்.



அத்தோடு மூலதனத்தை திரட்டத் தவறும் லெபனான் வங்கிகளை மறுசீரமைக்கவும் விற்கவும் மத்திய வங்கி முயற்சிக்கும் என்றார்.



மேலும் பெப்ரவரி 2021 இறுதிக்குள் மூலதனத்தை 20% அதிகரிக்க முடியாதவர்கள் சந்தையை விட்டு வெளியேற வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை